மெலுக்கா
சிந்துவெளி நாகரீக காலத்திய நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெலுக்கா (Meluḫḫa or Melukhkha (Me-luḫ-ḫaKI 𒈨𒈛𒄩𒆠) மெசொப்பொத்தேமியாவிற்கு வெளியே அமைந்த சிந்துவெளி நாகரீக காலத்திய நகரம் ஆகும்.[4] இது தற்கால பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ளது. சுமேரிய மொழியில் அமைந்த இப்பெயர் மெலுக்கா, மத்திய வெண்கலக் காலத்திய நகரம் ஆகும். மெசொப்பொத்தேமியாவின் அக்காடியப் பேரரசு, மெலுக்கா நகரத்திலிருந்து யானை தந்தங்கள் மற்றும் எருமைகள் பாரசீக வளைகுடா வழியாக இறக்குமதி செய்தனர்.
மெலுக்கா (Meluhha)
𒈨𒈛𒄩𒆠
𒈨𒈛𒄩𒆠
மெசொப்பொத்தேமியாவிற்கு வெளியே அமைந்த மெலுக்கா உள்ளிட்ட நிலப்பரப்புகள்
அக்காடியப் பேரரசின் உருளை முத்திரையின் குறிப்புகள்:அக்காடிய இளவரசன் கூறுவதை எழுதும பணியாளர். நீண்டு வளைந்த கொம்புகளுடன் கூடிய எருமைகளை சிந்துவெளி பகுதியான மெலுக்காவிலிருந்து, கிமு 2217 - 2193 காலத்தில் பண்டமாற்று வணிக முறையில் மெசொப்பொத்தேமியாவிற்கு கொண்டு வரப்பட்டவை.[1][2][3]
Remove ads
சிந்து சமவெளியின் தொல் திராவிட மொழிச் சொல்லான மெலுகா (மேல்+அகம்=மேட்டு நிலம்) மேட்டு நிலம் என்று பொருள். சுமேரியாவின் அக்காடியப் பேரரசின் உருளை முத்திரைகளில் ஆப்பெழுத்தில் குறித்துள்ளதாக தொல்லியல் வரலாற்று அறிஞர் அஸ்கோ பார்பொலா கூறுகிறார். மெலுகா பகுதியிலிருந்து சுமேரியாவிற்கு எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது. சுமேரியர்கள் அக்காதிய மொழியில் இந்த எள்ளிற்கு எல்லு அல்லது எல் என்றே அமைத்தனர்.[5]
இந்தியாவில் பேசப்படும் ஆசுத்ரோ-ஆசிய மொழிகளில் ஒன்றான முண்டா மொழியில் எள் என்பதற்கு ஜார்-திலா என்று அழைத்தனர் என மைக்கேல் விட்செல் கூறுகிறார். தொல்லியல் வரலாற்று அறிஞர் அஸ்கோ பார்போலா, மெலுகா மக்களை வேத நெறிக்கு அப்பாற்பட்ட மிலேச்ச மக்கள் என்றே கருதுகிறார்.[6][7]
Remove ads
சுமேரியாவுடன் வணிகம்
Mesopotamian "Meluhha" seal
அக்காடியப் பேரரசுவின் உருளை முத்திரையில் மெலுக்கா நாட்டைப் பற்றி குறித்துள்ளது.[8] Louvre Museum, reference AO 22310.[9]

கல்வெட்டுக் குறிப்புகள்
சுமேரியாவின் அக்காடியப் பேரரசர் சர்கோன் (கிமு 2334 - 2279), சிந்து வெளியின் மெலுகா மற்றும் மகான் பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வணிகக் கப்பல்கள் சுமேரியாவிற்கு பாரசீக வளைகுடா வழியாக வரும் என உருளை முத்திரையில் குறித்துள்ளார்.[12]
பேரரசர் சர்கோனின் பேரன் நரம்-சின் (கிமு 2254-2218) தனது உருளை முத்திரையில், மெலுகா மக்கள் தங்கத் துகள்கள் மற்றும் சிவப்பு பவளக் கற்களை அக்காடியப் பேரரசுக்கு விற்க வருவார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவின் லகாசு நகரப் பேரரசை கிமு 2144 முதல் 2124 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்த குடியா மன்னர், மெலுகா போன்ற வெளிநாட்டு நகரங்களை வெற்றி கொண்டு தன் பேரரசுடன் இணைப்பதாக கூறிய சூளுரையை உருளை முத்திரையில் செதுக்கினார்.[13] மெலுகா நகரம் குறித்து சுமேரிய புராண நூலான எண்கி மற்றும் நின்குர்சகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"May the foreign land of Meluhha load precious desirable cornelian, perfect mes wood and beautiful aba wood into large ships for you"
— Enki and Ninhursaga[14]
தொல் பொருட்கள்
சிந்துவெளி நாகரிகத்தின் அரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள் மற்றும் கனமான எடைகற்கள் போன்ற தொல் பொருட்கள் மெசொப்பொத்தேமியாவின் அண்மை கிழக்கின் நகரங்களின் தொல்லியற்களங்களில் கிடைத்துள்ளது. மெலுக்காவிலிருந்து பெரிய மரக்கலங்கள் மூலம் மெசொப்பொத்தேமியாவிற்கு கருங்காலி போன்ற மரங்கள் பெரிய அளவில் ஏற்றுமதியாயின. தற்கால ஆப்கானித்தானின் வடக்கு பகுதிகளில் உள்ள படாக்சான் மற்றும் சார்டுகாய் பகுதிகளின் சுரங்ககளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட அழகிய நீலக்கற்கள், இந்தியாவின் குஜராத்தின் லோத்தல் துறைமுக நகரத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின் அங்கிருந்து கடல் மூலம் பாரசீக வளைகுடாவிற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[15][16]
விலங்கு உருவங்கள்
மெலுக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க குரங்கு மற்றும் சுண்ணாம்புக் கல்லால் ஆன விலங்குகளின் சிற்பங்கள் மெசொப்பொத்தேமியாவின் சூசா மற்றும் ஊர் நகரத் தொல்லியல் களங்களில் கிடைத்துள்ளது.[17][18]
சுமேரியாவில் மெலுக்கா மக்களின் வணிக நிலையம்
சுமேரியன் காலத்தின் இறுதியில், லகாசு நகரத்தின் அருகே அமைந்த கிர்சு நகரத்தில் மெலுக்கா குடியேற்றம் இருந்ததற்கான ஏராளமான கல்வெட்டுக் குறிப்புகள் கிடைத்துள்ளது.[19]மூன்றாவது ஊர் வம்சம் மற்றும் அக்காடியப் பேரரசு காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் மெலுக்கா குடியேற்றங்கள் இருந்ததை உறுதி செய்கிறது.[19][19] இக்கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் சுமேரியாவிலிருந்து பெரிய பாய்மரப் படகுகள் மெலுக்காவிற்கு நேரடியாக வணிகம் நடைபெற்றதை அறிய முடிகிறது.[19]மூன்றாவது ஊர் வம்ச காலத்தில், மெலுக்காவிலிருந்து மெசொப்பொத்தோமியாவிற்கு நேரடி வணிகம் குறைந்து, தற்கால கத்தார் நாட்டின் அருகில் உள்ள தில்மூன் நகரத்துடன் வர்த்தகம் மாற்றப்பட்டது.[19]
- சுமேரியாவில் மெலுக்கா குடியேற்றங்கள் இருந்ததை குறிப்பிடும் கற்பலகை கல்வெட்டுக் குறிப்புகள்[20][20][21]
- படியெடுக்கப்பட்ட கற்பலகை குறிப்பில் இரண்டாம் பத்தியில் ஆப்பெழுததில் மெலுக்கா எனக்குறிப்பிட்டுள்ளது.
Remove ads
சிந்துவெளி நாகரிகத்துடன் மெலுக்காவின் தொடர்பு
சிந்துவெளி நாகரிகத்திற்கு சுமேரியர்கள் வைத்த பெயர் தான் மெலுக்கா எனப்பெரும்பாலான தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.[22]. பின்லாந்து தொல்லியல் அறிஞர் அஸ்கோ பார்ப்போலா மெலுக்கா என்பது சமஸ்கிருத மொழியில் மிலேச்ச மக்களை குறிக்கும் என்கிறார்.[23]

கிமு 2200 காலத்திய குறிப்புகள் மெலுக்கா சுமேரியாவுக்கு கிழக்கில் இருந்த சிந்துவெளி எனக்குறிப்பிடுகிறது. மெசொப்பொத்தேமியாவிற்கும் இந்தியத் துணைக் கண்டத்திற்கும் இடையிலான வர்த்தகத்திற்கு போதுமான தொல்பொருள் சான்றுகள் உள்ளது. சிந்து சமவெளி நகரத்தின் அரப்பா களிமண் முத்திரைகள், பொருட்களின் பொதிகளை மூடு முத்திரை இட பயன்படுத்தப்பட்டது. இந்த இந்திய முத்திரைகள் பல ஊர் மற்றும் பிற மெசொப்பொத்தேமியா தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[25][26] மெலுக்காவிலிருந்து சுமேரியாவிற்கு வர்த்தகம் குறைவாக இருப்பினும் விலைமதிப்பற்ற மரங்கள், தந்தம், தங்கம் மற்றும் மெருகூட்டப்பட்ட கல் மணிகள், முத்துகள், சங்குகள், வெள்ளி, தகரம், கம்பளித் துணி, எண்ணெய் மற்றும் தானியங்கள் மெசொப்பொத்தேமியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் அடங்கும். இவைகள் மெசொப்பொத்தேமியாவில் உற்பத்தியாகும் தாமிரம், பருத்தி ஜவுளி மற்றும் கோழிகளுக்காக பண்டமாற்றாக வணிகம் செய்யப்பட்டிருக்கலாம்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads