மேனகா (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

மேனகா (நடிகை)
Remove ads

பத்மாவதி ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட மேனகா (Menaka) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பிறந்தது நாகர்கோவில், தமிழ்நாடு ஆகும்.[1] இவர் 1980 முதல் 1986 ஆண்டுகள் வரையிலான குறுகிய காலங்களில் நடித்தார். இவர் சுமார் 116 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை மலையாளத் திரைப்படங்கள் ஆகும். மேலும், சில தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்[2].[3] தனது 19 ஆவது வயதில் காலிவீடு எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்தார்[4]. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டில் லிவிங் டூ கெதர் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்தார்.[5]

விரைவான உண்மைகள் மேனகா, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

மேனகா பழமை விரும்பி குடும்பத்தில் நாகர்கோவிலில் பிறந்தார்.[6] இவரின் தந்தை ராஜகோபால் தென்காசியைச் சேர்ந்தவர். தாய் சரோஜா கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியைச் சார்ந்தவர் ஆவார்.[7]

மேனகா மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரான சுரேஷ் குமார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் திருமணம் அக்டோபர் 27, 1987 இல் குருவாயூரில் உள்ள கிருட்டிணன் கோயிலில் வைத்து நடைபெற்றது.[6] சுரேஷ் குமார் , ரேவதி கலாமந்திர் எனும் பெயரில் திரைபடங்களைத் தயாரித்தார். இவர்களுக்கு ரேவதி, கீர்த்தி சுரேஷ் என இரு மகள்கள் உள்ளனர்.[6] கீர்த்தி சுரேஷ் , குபேரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பைலட் எனும் திரைப்படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார்[8]. மேலும் கதாநாயகியாக பிரியதர்சன் இயக்கத்தில் கீதாஞ்சலி திரைப்படத்தில் நடித்தார்.[9]

Remove ads

தமிழ்த் திரைப்படங்கள்

1980

இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் ராமாயி வயசுக்கு வந்துட்டா . இதனை வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் இயக்கினார். ஞானமணி மற்றும் மனோகரன் ஆகியோர் தயாரித்தனர்.[10]

1980 இல் சாவித்ரி எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை பரதன் இயக்கினார். இது பிரயாணம் எனும் தெலுங்குப்படத்தின் தமிழ் மீள் உருவாக்கம் ஆகும். இதில் வினோத்துடன் இணைந்து நடித்திருப்பார். மனோரமா, நந்திதா போஸ் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மராஜன் திரைக்கதை அமைத்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் எழுதினார். வியாபார ரீதியில் இது தோல்வியடைந்தது.[11]

துரையின் இயக்கத்தில் ஒலிபிறந்தது எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் கல்யாணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

1981

1981 இல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்தார். இதனைக் கைலாசம் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. இதில் ரசினிகாந்த் தந்தை, மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்தார். லட்சுமி), சரிதா, கவுண்டமணி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படத்திற்குக் கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். இதன் கதை மற்றும் வசனம் எழுதியவர் விசு. திரைக்கதை எழுத்தாளர் கைலாசம் பாலசந்தர்.[12]

ஆர். எஸ். சோமநாதன் இயக்கத்தில் காலம் திரைப்படத்திலும், வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் கீழ் வானம் சிவக்கும் திரைப்படத்திலும் நடித்தார்.

1982

1982 இல் அமிர்தம் இயக்கத்தில் தூக்குமேடை (திரைப்படம்) திரைப்படத்தில் பவானி கதாப்பத்திரத்தில் நடித்தார். கே. எஸ். சேதுராமன் இயக்கத்தில் நிஜங்கள் எனும் திரைப்படத்தில் மேனகா கதாப்பாத்திரத்தில் நடித்தார். என்.சி. சக்ரவர்த்தி இயக்கத்தில் இனியவளே வா எனும் திரைப்படத்தில் சகுந்தலா கதாபத்திரத்தில் நடித்தார்.

Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads