ஒய். பி. சவான்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஒய். பி. சவான்
Remove ads

யசுவந்த்ராவ் சவாண் (Yashwantrao Balwantrao Chavan 12 மார்ச்சு 1913–25 நவம்பர் 1984) இந்திய அரசியல்வாதி . ஒய்.பி.சவாண் என அறியப்படும் இவர் மராட்டிய மாநில முதலமைச்சராகவும் இந்திய நடுவணரசின் துணைப்பிரதமராகவும் பதவி வகித்தவர். மேலும் நடுவணரசின் உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலும் இருந்தவர்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஒய். பி. சவான்Yashwantrao Chavan, 5வது இந்திய துணைப் பிரதமர் ...
Remove ads

இளமைக்காலம்

Thumb
சவான் அவரது குடும்பத்துடன்

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள தேவராசுதிரே என்னும் சிற்றூரில் பிறந்தார். இளம் அகவையில் தந்தையை இழந்த சவாண் தம் தாயின் கவனிப்பில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1940 ஆம் ஆண்டில் சத்தாரா மாநில காங்கிரசு தலைவர் ஆனார். 1942 இல் அனைத்திந்திய காங்கிரசு மும்பை மாநாட்டில் கலந்து கொண்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது ஆனார். 1944 இல் சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

பதவிகளும் பொறுப்புகளும்

1962 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் சவகர்லால் நேருவால் இவர் பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டார். 1978 இல் இந்திய காங்கிரசுக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது இந்திரா காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். 1979 இல் கரன்சிங் தலைமையிலான அமைசச்சரவையில் ஒய்.பி.சவாண் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதம அமைச்சராகவும் ஆனார். 1981 இல் இந்திரா காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார். 1982 இல் 8 ஆவது நிதிக்குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

மற்ற பணிகள்

ஒய்.பி.சவாண் சமூக அறிவியலில் நாட்டம் கொண்டவர். மராட்டிய மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினார். மராத்திய சாகித்திய மண்டல் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை தோற்றுவித்தார். மராத்தி விசுவ கோசு என்னும் மராத்திய மொழி கலைச் சொற்கள் தொகுப்புப் பணியில் முன்னின்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads