ஐரோ வலயம்

From Wikipedia, the free encyclopedia

ஐரோ வலயம்
Remove ads

யூரோவலயம் (Eurozone; ஒலிப்பு, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (Euro Area) என்றழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் நாணயம், ஒன்றிய வகை ...
Remove ads

தோற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:

1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.

2. அரசின் நிதி நிலைமை

அ. ஆண்டுப் பற்றாக்குறை : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
ஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).

3. நாணய மாற்று வீதம் ஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.

4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.

1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சுலொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.

Remove ads

விரிவாக்கம்

Thumb
2023

ஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.

டென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Thumb
ஐரோ வலயத்தின் பணவியல் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, பிராங்க்ஃபுர்ட்

நிருவாகம்

Thumb
ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே

ஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.

Remove ads

உறுப்பினர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் நாடு, ஐஎசுஓ குறியீடு ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads