ராஜாமகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜாமகள் என்பது 2019 முதல் 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான இரு குடும்ப வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பம் மற்றும் பாச பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ரக்த சம்பந்தம்' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.[2]
இந்த தொடர் விஜய பாஸ்கர் மற்றும் சிவா ஆகியோர் இயக்கத்தில் ஐரா அகர்வால், ரியாஸ், விமல் வெங்கடேசன், சத்திய சாயி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[3] இந்த தொடர் 28 அக்டோபர் 2019 முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 27 நவம்பர் 2021 அன்று 538 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
அண்ணன் தங்கையான சிவகாமிக்கு ஆண் குழந்தையும் அண்ணன் ராஜனின் மனைவிக்கு பெண் குழந்தையும். பிறக்கின்றது. பெண்குழந்தையை வெறுக்கும் அண்ணி இதனால் தனது குழந்தையை யாருக்கும் தெரியாமல் மாத்தி வைக்கின்றார் சிவகாமி. குழந்தைகள் வளந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் முரண் காரணமாக உருவாகும் பிரச்னைகளை மையமாக வைத்து காதல், பொறாமை, தியாகம் என இந்தத் தொடர் நகர்கிறது.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஐரா அகர்வால் - துளசி[4]
- விஷ்வாவின் முன்னாள் மனைவி, சிவகாமி மற்றும் பார்த்திபனின் வளர்ப்பு மகள், பைரவி மற்றும் ராஜராஜனின் உண்மையான மகள்.
- ரியாஸ் (2019-2021) → விமல் வெங்கடேசன் (2021) - விஷ்வா
- துளசியின் முன்னாள் கணவர், பைரவி மற்றும் ராஜராஜனின் வளர்ப்பு மகன், சிவகாமி மற்றும் பார்த்திபனின் உண்மையான மகன்.
- சத்திய சாயி - கனகா, (விஷ்வாவின் வருங்கால மனைவி)
- விஷ்வாவின் முன்னாள் வருங்கால மனைவி, விஷ்வாவை திருமணம் செய்ய விரும்புகின்றார்.
துணை கதாபாத்திரம்
- வனஜா - பைரவி, (விஷ்வாவின் வளர்ப்பு தாய் மற்றும் துளசியின் உண்மையான தாய்)
- காயத்ரி பிரியா - சிவகாமி, (துளசியின் வளர்ப்பு தாய் மற்றும் விஷ்வாவின் உண்மையான தாய்)
- பரத் கல்யாண் - ராஜ ராஜன் (ராஜா), (பைரவியின் கணவர் மற்றும் சிவகாமியின் சகோதரர்)
- பரதன் சிவா (2019-2020) → யுவன்ராஜ் நேத்ரன் (2020-2021) - பார்த்திபன், (சிவகாமியின் கணவர்)
- சாந்தி வில்லியம்ஸ் (2019-2020) → பாலாம்பிகா (2020-2021) - காஞ்சனா, (கனகா லட்சுமியின் பாட்டி)
- மீனாட்சி (2019-2020) → விசாலாட்சி மணிகண்டன் (2020) → மீண்டும் மீனாட்சி (2020-2021) - சத்தியவதி, (பைரவியின் வீட்டு வேலைக்காரி)
- ஸ்ரிதிக் ஸ்ரீராம் - ஸ்ரீராம், (விஷ்வாவின் நண்பர்)
- ரேகா நாயர் - ரேணுகா தேவி, (மாவட்ட அமைச்சர்)
சிறப்புத் தோற்றம்
Remove ads
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் துளசியாக ஐரா நடிக்கின்றார்[5] இவர் கண்மணி, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் கன்னட நடிகர் ரியாஸ் விஷ்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், பின்னர் 2021 இல் இவருக்கு பதிலாக நடிகர் விமல் வெங்கடேசன் என்பவர் இவரின் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்களுடன் வனஜா, பரத் கல்யாண், காயத்ரி பிரியா, யுவன்ராஜ் நேத்ரன் ஆகியோரும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
நேர அட்டவணை
இந்த தொடர் 28 அக்டோபர் 2019 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 19 ஏப்ரல் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3:00 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads