லாசா மாவட்டம்

திபெத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

லாசா மாவட்டம்map
Remove ads

லாசா மாவட்டம் அல்லது செங்க்குவான் மாவட்டம் (Lhasa or Chengguan) சீனாவின் மேற்கில், இந்தியாவின் வடகிழக்கில், சீனாவின் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஒன்றான திபெத் தன்னாட்சிப் பகுதியின் மக்கள் தொகை மிக்க மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் லாசா நகரம் ஆகும்.[3]லாசா நகரம், கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் கருதுகின்றனர். லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 அடி) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான லாசா ஆறு பாய்கிறது.

விரைவான உண்மைகள் லாசா ཁྲིན་ཀོན་ཆུས་ • 城关区, நாடு ...

திபெத்திய பீடபூமியில் சிஞ்சியாங் நகரத்திற்குப் பின அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக லாசா மாவட்டம் உள்ளது. கிபி 17-ஆம் நூற்றான்டிலிருந்து, லாசா மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடமாகவும், ஆன்மிகத் தலைமையிடமாகவும் உள்ள லாசா நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,656 மீட்டர்கள் (11,990 அடி) உயரத்தில் உள்ளது. லாசா நகரம் உலகில் உயரமான இடத்தில் அமைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. லாசா மாவட்டத்தில் திபெத்திய பௌத்தம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க இடங்கள் பொட்டலா அரண்மனை, ஜோகாங் விகாரை மற்றும் நோர்புலிங்கா அரண்மனைகள் ஆகும்.

லாசா மாவட்டத்தில் திபெத்திய பல்கலைக்கழகம் உள்ளது.[4]525 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லாசா மாவட்டத்தின், 2010-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,79,074 ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக திபெத்தியர்களுடன் ஹான் சீனர்கள் மற்றும் ஊய் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இங்கு திபெத்திய மொழி மற்றும் சீனர்களின் மாண்டரின் மொழி பேசப்படுகிறது.

Remove ads

புவியியல்

திபெத்திய பீடபூமியில் லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 அடி) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான லாசா ஆறு பாய்கிறது. கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் லாசா நகரத்தை கருதுகின்றனர்.

லாசா மாவட்ட நிர்வாகம்

லாசா மாவட்டம் 12 துணை-மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Lhasa (1971−2000 normals, extremes 1951−2016), மாதம் ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

திபெத்திய பீடபூமியில் 525 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லாசா மாவட்டத்தின் 2010-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 2,79,074 ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக திபெத்தியர்களுடன் ஹான் சீனர்கள் மற்றும் ஊய் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இங்கு திபெத்திய மொழி மற்றும் சீனர்களின் மாண்டரின் மொழி பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் திபெத்திய பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.


மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads