வடமேற்கு மாகாணங்கள்

From Wikipedia, the free encyclopedia

வடமேற்கு மாகாணங்கள்map
Remove ads


வடமேற்கு மாகாணம் (North-Western Provinces) பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் 1836-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினரால் நிறுவப்பட்டது. 1835=இல் 9479 சதுர மைல் நிலப்பரப்பு கொண்டிருந்த இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 45,00,000 (45 இலட்சம்) ஆகும்.

விரைவான உண்மைகள்

பின்னர் இம்மாகாணம் 1858-இல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது. 1858-இல் அயோத்தி நவாப் ஆண்ட அவத் பிரதேசத்தை பறித்து, வடமேற்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டு வடமேற்கு மாகாணம் மற்றும் அவத் எனப்பெயரிடப்பட்டது.

1902-இல் இம்மாகாணத்தை மறுசீரமைத்து ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. [2] அலகாபாத் நகரம் இம்மாகாணத்தின் தலைநகராக செயல்பட்டது.[1]1937-இல் மீண்டும் இம்மாகாணத்தை மறுசீரமைத்து ஐக்கிய மாகாணம் என 1950 வரை அழைக்கப்பட்டது.

Remove ads

நிலப்பரப்புகள்

இம்மாகாணத்தில் தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ மற்றும் பைசாபாத் கோட்டம் தவிர்த்து அனைத்து பகுதிகளும் இருந்தது. வடமேற்கு மாகாணத்திலிருந்த தில்லி பகுதி பஞ்சாப் மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அஜ்மீர் மற்றும் சௌகோர் மற்றும் நேர்புத்தா பகுதிகள் வடமேற்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

நிர்வாகம்

வடமேற்கு மாகாணத்தின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்பட்டார்.

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads