வரையாடு

From Wikipedia, the free encyclopedia

வரையாடு
Remove ads

வரையாடு (Tahrs [a] ( /tɑːrz/ TARZ, /tɛərz/ TAIRZ ) அல்லது tehrs ( /tɛərz/ TAIRZ )[1] என்பது ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுடன் தொடர்புடைய பெரிய இரட்டைப்படைக் குளம்பிகள் ஆகும். மூன்று சிற்றினங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆசியாவைச் சேர்ந்தவை. முன்பு இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்பட்டு, கெமிட்ரகசு என்ற ஒற்றை வகை உயிரலகுப் பேரினத்தில் வைக்கப்பட்டது, மரபணு ஆய்வுகள் இவை அவ்வளவு நெருங்கிய தொடர்புடையவை அல்ல என்பதை நிரூபித்துள்ளன. இப்போது இந்த மூன்றும் தனித்தனிச் சிற்றினங்களாக தனித்தனி வகை வகைகளின் உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றன. கெமிட்ரகசு இப்போது இமயமலை வரையாட்டினையும், நீலகிரி வரையாட்டிற்கு நீலகிரிட்ரகசு பேரினமும் அரேபிய வரையாட்டிற்கு அரபிடிராகசு பேரினமும் ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் வரையாடு, உயிரியல் வகைப்பாடு ...

ஓமானின் அரேபிய வரையாடும் தென்னிந்தியாவில் நீலகிரி வரையாடும் சிறிய வாழிட வரம்பினைக் கொண்டுள்ளன. மேலும் இவை அழியும் அபாயத்தில் அருகிய இனமாகக்கருதப்படுகின்றன. இமயமலை வரையாடு ஒப்பீட்டளவில் இமயமலையில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இது நியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்சு மலைப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு இது பொழுதுபோக்குக்காக வேட்டையாடப்படுகிறது. மேலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள மேசை மலையில் காணப்படுகிறது. இது 1936ஆம் ஆண்டில் ஒரு மிருகக்காட்சிசாலையிலிருந்து தப்பிய ஒரு இணை வரையாடுகளின் வம்சாவளியைச் சேர்ந்தது.[3] ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன.[4] நீலகிரி வரையாட்டினைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவின் மலைத்தொடர்களில் இதன் இருப்பு இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. 1998-இல் மொத்தம் ~1400 தனிநபர்களுடன் கூடிய இதன் மிகப்பெரிய எண்ணிக்கையானது தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையில் வாழ்கின்றன. இங்கு வேட்டையாடுபவர்கள் மற்றும் சட்டவிரோத வேட்டையாடுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.[5]

Remove ads

நடத்தை

காலையில் இரை தேடுவதைத் தொடர்ந்து ஒரு நீண்ட ஓய்வினை மேற்கொண்டு, பின்னர் மாலையில் உணவு தேடும் வழக்கமுடையன. வரையாடுகள் பொதுவாகச் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. இரவில் இரை தேடுவதில்லை. இவற்றைக் காலையிலும் மாலையிலும் ஒரே இடத்தில் காணலாம்.[6]

குறிப்புகள்

  1. sometimes referred to as thars by confusion with the Himalayan serow (Capricornis sumatraensis thar)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads