வாரிசு
வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாரிசு (Varisu) என்பது 2023 இல் தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 சனவரி 11 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- விஜய் - விஜய் ராஜேந்திரன்
- ராஷ்மிகா மந்தண்ணா - திவ்யா
- சரத்குமார் - ராஜேந்திரன் பழனிசாமி
- பிரபு - ஆனந்த் பத்மநாபன்
- ஜெயசுதா - சுதா ராஜேந்திரன்
- பிரகாஷ் ராஜ் - ஜெயபிரகாஷ்
- ஸ்ரீகாந்த் - ஜெய் ராஜெந்திரன்
- ஷாம் - அஜெய் ராஜெந்திரன்
- எஸ். ஜே. சூர்யா - ஆதித்திய மிட்டால்
- யோகி பாபு - கிச்சா
- சங்கீதா கிரிஷ் - ஆர்த்தி ஜெய்
- சம்யுக்தா சண்முகநாதன் - அஜெயின் மனைவி
- சஞ்சனா திவாரி - ரியா
- நந்தினி ராய் - ஸ்மிதா
- கணேஷ் வெங்கட்ராமன் - முகேஷ்
- சிறீமன் - தம்பிதுரை
- விடிவி கணேஷ் - வேல்ராஜ்
- மைம் கோபி - சங்கத்தலைவர்
- பரத் ரெட்டி
- சஞ்சனா சாரதி - விஜய்யின் நண்பி
- சதீஸ் - விஜய்யின் நண்பன்
- சுமன் - கௌதம்
- மத்தேயு வ்ர்கீஸ் - மத்தேயு
- பாண்டி ரவி - ஈஸ்வர்
- ஹர்ஷிதா
- அத்வைத்
- கிகி விஜய் - சிறப்புத் தோற்றம்
- ஜானி மாஸ்டர் - 'தீ தளபதி' பாடலில் சிறப்புத் தோற்றம்
ராஜேந்திரனின் தந்தை பழனிசாமியை சித்தரிக்க ஜெமினி கணேசனின் உருவப்படம் பயன்படுத்தப்பட்டது.
Remove ads
தயாரிப்பு
2021 செப்டம்பர் 26 அன்று, தளபதி 66 என்ற தலைப்பில் விஜய்யின் 66வது படம் அறிவிக்கப்பட்டது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் மூலம் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்த முதல் தமிழ் படம். விஜய்யின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2022 சூன் 21 அன்று வாரிசு என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது.[6]
இசை
விஜய்யுடன் தனது முதல் கூட்டணியில் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.[7] இப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.[8]பாடலாசிரியர் விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
திரைப்பட வெளியீடு
2023 சனவரி 11 ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.[9]
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads