வி. சேகர்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

வி. சேகர்
Remove ads

வி. சேகர் (1951 அல்லது 1952 – 14 நவம்பர் 2025) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தமிழ்த்தேசியவாதியும் ஆவார்.[2] இவர் குடும்பப் படங்களை அதிகம் இயக்கியவர்.[3] இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தரக் குடும்பக்கதைப் படங்களாய் இருக்கும்.[4] இவரின் மகன் கால் மார்க்குசு நடிப்பில் இவர் இயக்கிய சரவணப்பொய்கை திரைப்படம் இவரின் கடைசிப் படமாகும்.[5]

விரைவான உண்மைகள் வி. சேகர், பிறப்பு ...
Remove ads

திரை வாழ்க்கை

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டுபடப்பெயர்நடிகர்கள்
1990நீங்களும் ஹீரோதான்நிழல்கள் ரவி, திவ்யா
1991நான் புடிச்ச மாப்பிள்ளைநிழல்கள் ரவி, சரண்யா
1991பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்சந்திரசேகர், பானுப்பிரியா
1992ஒண்ணா இருக்க கத்துக்கணும்சிவகுமார், ஜீவா, மனோரமா, கவுண்டமணி, செந்தில்
1993பொறந்த வீடா புகுந்த வீடாசிவகுமார், பானுப்பிரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், சார்லி
1993பார்வதி என்னை பாரடிசரவணன், ஸ்ரீ பார்வதி
1994வரவு எட்டணா செலவு பத்தணாநாசர், ராதிகா, கவுண்டமணி, வடிவேல், செந்தில், கோவை சரளா
1995நான் பெத்த மகனேநிழல்கள் ரவி, ராதிகா, ஊர்வசி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா
1996காலம் மாறிப்போச்சுபாண்டியராசன், சங்கீதா, வடிவேல், சுந்தரராசன், இரேகா, கோவை சரளா
1997பொங்கலோ பொங்கல்விக்னேசு, சங்கீதா, வடிவேல், விவேக்கு, சின்னி ஜெயந்து, சார்லி, கோவை சரளா
1998எல்லாமே என் பொண்டாட்டிதான்இராம்கி, சங்கவி, வடிவேல், இராதிகா
1999விரலுக்கேத்த வீக்கம்நாசர், லிவிங்கு ஸ்டன், வடிவேல், விவேக்கு, குஷ்பூ, கனகா, கோவை சரளா
2000கூடி வாழ்ந்தால் கோடி நன்மைநாசர், கரண், வடிவேல், குஷ்பூ, கோவை சரளா
2001வீட்டோட மாப்பிள்ளைநெப்போலியன், ரோஜா
2002நம்ம வீட்டு கல்யாணம்முரளி, மீனா, வடிவேல், விவேக்கு, கோவை சரளா
2003ஆளுக்கொரு ஆசைசத்யராஜ், மீனா, வடிவேல், செந்தில்
2010ஹெண்டதீர் தர்பார் (கன்னடப் படம்)ரமேஷ் அரவிந்த், மீனா
2014சரவணப்பொய்கைகால் மார்க்குசு, அருந்ததி, விவேக்கு, கருனாசு

தொலைக்காட்சித் தொடர்கள்

  • பொறந்த வீடா புகுந்த வீடா (சன் தொலைக்காட்சி)
  • வீட்டுக்கு வீடு (ராஜ் டிவி)
Remove ads

இறப்பு

வி சேகர் 2025 நவம்பர் 14 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 73-ஆவது அகவையில் காலமானார்.[6][7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads