வேலம்மாள் (தொலைக்காட்சித் தொடர்)
என்பது 12 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்க From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேலம்மாள் என்பது 12 ஏப்ரல் 2021[1] ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான வரலாற்று நாடகத் தொடர் ஆகும்.[2] இது பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலையான இராணி வேலு நாச்சியார்[3] என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'சரவணன்' என்பவர் இயக்க பானிஜய் ஆசியா என்ற நிறுவனம் மூலம் 'தீபக் தர்' என்பவர் தயாரித்துள்ளார்.[4]
இந்த தொடரில் வேலம்மாள் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திகா என்பவர் நடிக்க, இவருடன் முக்தா பானு, விக்னேஷ், அம்பிகா, ரேஷ்மா பசுபுலேட்டி, சம்பத் ராம், ஓ. ஏ. கே. சுந்தர் போன்ற பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
Remove ads
கதை சுருக்கம்
இது 1730 முதல் 1796 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி வேலு நாச்சியார் பற்றியது. தனக்கு ஆண் குழந்தை பிறந்து, தனக்கு பிறகு நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் சேதுபதி என்ற அரசனுக்கு வேலம்மாள் என்ற பெண் குழந்தை பிறக்கிறது. பெண் என்பதால் தன்னை ஒதுக்குவது பற்றி அதிக வருத்தத்தில் இருக்கும் வேலம்மாள், வருங்காலத்தில் எப்படி நாட்டை ஆளும் அளவுக்கு வளர்கிறாள் என்பது தான் கதை. .
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரங்கள்
- ரேஷ்மா பசுபுலேட்டி[7] - நாகவல்லி
- ஓ. ஏ. கே. சுந்தர் - மரைக்காயர்
- சம்பத் ராம் - வீரண்ணா
- ரம்யா ராமகிருஷ்ணா - தனம்
- ஷாமிலி சுகுமார்
- ராம்ஜி - மாயவன்
- ராஜா
- நிலா[8] - காந்தள்
நடிகர்களின் தேர்வு
என்ற தொடரில் நடித்த 'கார்த்திகா' என்பவர் வேலம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவரின் தாய் கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை 'முக்தா பானு'[9] என்பவர் உமையாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவரின் கணவன் கதாபாத்திரத்தில் 'விக்னேஷ்' என்பவர் சேதுபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல தமிழ் நடிகை அம்பிகா, ரேஷ்மா பசுபுலேட்டி, ரம்யா ராமகிருஷ்ணா, ஷாமிலி சுகுமார், சம்பத் ராம், ஓ. ஏ. கே. சுந்தர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
தயாரிப்பு
2020 ஆம் ஆண்டு ஒரு வரலாற்று தொடர் தயாரிப்பதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்தது. ஆனால் கொரோனா வைரசு காரணத்தால் அது தடை பெற்று 2020 இறுதி மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் முன்னோட்டம் 28 டிசம்பர் 2020 அன்று ஒளிபரப்பப்பட்டு இருந்தது.[10] பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தயாரிப்பு சார்ந்த பணிகள் முடியாத காரணத்தால் வேலம்மாள் தொடரை சில மாதம் ஒத்திவைக்கப்ட்டு 12 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு மாலை 6 மணிக்கு காற்றின் மொழி என்ற தொடருக்கு பதிலாக ஒளிபரப்பட்டது.[11]
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads