ஓ. ஏ. கே. சுந்தர்

தமிழ் நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஓ. ஏ. கே. சுந்தர் (O. A. K. Sundar) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார். விருமாண்டியில் இவர் நடித்த பகைகொண்ட பாத்திரத்துக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடரான ரோமாபுரி பாண்டியன் மற்றும் மகாபாரதத்தில் முக்கியக் கதாபாத்திரமான பீஷ்மர் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது தந்தை தமிழ் நடிகரான ஓ. ஏ. கே. தேவர் ஆவார். அவர் பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார்.

விரைவான உண்மைகள் ஓ. ஏ. கே. சுந்தர், பிறப்பு ...
Remove ads

தொழில்

ஓ. ஏ. கே. சுந்தர் நாடோடிப் பாட்டுக்காரன் (1992) படத்தின் வழியாக திரைப்படங்களில் அறிமுகமானார்.[1] விருமாண்டி (2004), நான் அவனில்லை (2007) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[2] ஐயர் ஐ. பி. எஸ்சில் இவரது நடிப்பு குறித்து, ஒரு விமர்சகர் "ஆனந்தராஜ் மற்றும் ஓ. ஏ. கே. சுந்தர் (தாதாவின் மகன்கள்) போதுமானவர்கள்" என்று குறிப்பிட்டார். மகாபாரதம் என்ற தொலைக்காட்சி தொடரில் பீஷ்மரில் பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். பல தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிந்த பிறகு, திரைப்படங்களில் கவனம் செலுத்துவதற்காக அவற்றில் பணிபுரிவதை நிறுத்தினார்.[3] அதன்பிறகு கிடாரி (2016),[4][5] சாமி 2 (2018),[6] ராக்கி: தி ரிவெஞ்ச் (2019) உள்ளிட்ட பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.[7]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்த ஓ. ஏ. கே. தேவரின் மகன் இவர்.[2][8][9] 1998 ஆம் ஆண்டில், இவர் எஸ் லோகநாயகியை மணந்தார்.[10] ரிஷிகேஷில் வாடா (2010) படப்பிடிப்பில் இருந்தபோது, இவர் ஒசாமா பின்லேடன் போன்ற வேடத்தில் தோற்றமளித்ததால் இந்திய ராணுவத்தால் பிடிக்கபட்டார்..[11]

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, நிகழ்ச்சி ...

திரைப்படவியல்

  • குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படாதைவை அனைத்தும், தமிழ் படங்களாகும்.
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads