ஹசரா கோட்டம்

From Wikipedia, the free encyclopedia

ஹசரா கோட்டம்
Remove ads

ஹசாரா கோட்டம் (Hazara Division), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் அப்போட்டாபாத் நகரம் ஆகும். அப்போட்டாபாத்]]நகரமானது, மாகாணத் தலைநகரான பெசாவருக்கு கிழக்கே 200கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு வடகிழக்கே 135 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் மாவட்டங்களும், வருவாய் வட்டங்களும் உள்ளது. இக்கோட்ட நிர்வாகி பாகிஸ்தான் அரசின் ஆணையாளர் ஆவார். இம்கோட்டம் 8 மாவட்டங்களும், வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது. இக்கோட்டத்தில் சிந்து ஆறு பாய்கிறது.

விரைவான உண்மைகள் ஹசாரா கோட்டம் ہزارہ ڈویژنهزاره څانګه‎, நாடு ...
Thumb
கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்கள்
Remove ads

கோட்ட எல்லைகள்

ஹசாரா கோட்டத்தின் வடக்கில் கில்ஜித் பல்டிஸ்தான், கிழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், தெற்கில் பஞ்சாப் மாகாணம், மேற்கில் மாலகண்ட் கோட்டம் எல்லைகளாக உள்ளது[4].

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 6,188,736[5]ஆகும். இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 60.95% ஆக உள்ளது. 99%க்கும் மேற்பட்ட மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த்கோ மொழி 56%, பஷ்தூ மொழி 20.68%, கோகிஸ்தானி மொழி 14.6% மற்றும் பிற மொழிகள் 9.11% மக்களால் பேசப்படுகிறது.

மாவட்டங்கள்

ஹசாரா கோட்டம் 9 மாவட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[6]

மேலதிகத் தகவல்கள் #, மாவட்டம் ...

வருவாய் வட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் #, வட்டம் ...
Remove ads

அரசியல்

இக்கோட்டமானது கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 18 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 7 தொகுதிகளையும் கொண்டுள்ளது

மேலதிகத் தகவல்கள் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள், நாடாளுமன்றத் தொகுதிகள் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads