1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

From Wikipedia, the free encyclopedia

1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா
Remove ads

1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிலிருந்து ஒரேஒரு போட்டியாளர் பங்கேற்றார். பிரான்சின் பாரிசில் நடந்த இந்தப் போட்டிகளில் இவ்வாறாக இந்தியா தற்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்றது. இந்தியா விடுதலை பெறாதிருந்த காலமெனினும் ஒலிம்பிக் வரலாற்றாளர்கள் இந்தியாவின் முடிவுகளைத் தனியாகவே தொகுத்து வந்துள்ளனர். இந்தியாவின் சார்பாக நார்மன் பிரிட்ச்சர்டு பங்கேற்றார்.

விரைவான உண்மைகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, பன்னாட்டு ஒலிம்பிக்குழு வழங்கியகுறியீடு ...


2005இல் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் 2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் அலுவல்முறையாக தடகளப் போட்டிகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகையில் வரலாற்றுப் பகுதியில் பிரிட்ச்சர்டு 1900இல் பெரிய பிரித்தானியாவிற்காக விளையாடியதாக பதிந்துள்ளது. இதனை ஆராய்ந்த ஒலிம்பிக் வரலாற்றாளர்கள் சூன் 1900இல் நடந்த பிரித்தானிய தட கள சங்கம் நடத்திய தகுதிப் போட்டியில் வென்று பெரிய பிரித்தானியா சார்பாக விளையாடியதாக அறிந்தனர்.[1] இருப்பினும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பிரிட்சர்டு இந்தியா சார்பில் பங்கேற்றதாகவே கருதுகின்றது.

Remove ads

பதக்கம் பெற்றவர்கள்

போட்டி முடிவுகள்

தட களப் போட்டிகள்

பிரிட்ச்சர்டு தட களப் போட்டிகளில், ஐந்து போட்டிகளில் பங்கேற்றார். இவற்றில் இரண்டில் இரண்டாவதாக வந்தார்.

மேலதிகத் தகவல்கள் போட்டி, இடம் ...
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads