2018 சுதந்திரக் கோப்பை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2018 சுதந்திரக் கோப்பை (2018 Nidahas Trophy, 2018 நிதாகஸ் கோப்பை, சிங்களம்: 2018 නිදහස් කුසලානය) துடுப்பாட்ட பன்னாட்டு இருபது20 (ப20இ)[1] சுற்றுப்போட்டி இலங்கையில் 2018 மார்ச் மாதத்தில் நடைபெற்றது.[2][3] இத்தொடரில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றின.[4] ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் இரு தடவைகள் விளையாடின. முதலிரண்டு இடத்தைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.[2] இலங்கையின் 70வது சுதந்திர நாளை இச்சுற்றுப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டது.[5] இச்சுற்றுப்போட்டியின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச அரங்கத்தில் இடம்பெற்றன.[6] இச்சுற்றுப்போட்டியை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்கவரி நெட்வர்க்சு ஆசியா பசிபிக் நிறுவனத்தின் டி-ஸ்போர்ட் அலைவரிசை வாங்கியது.[7][8]

விரைவான உண்மைகள் 2018 சுதந்திரக் கோப்பை, நாள் ...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2018 மார்ச் 6 இல் நடைபெற்ற ஆரம்பப் போட்டி கடும் பாதுகாப்பின் மத்தியில் விளையாடப்பட்டது. அம்பாறை, மற்றும் கண்டியில் முசுலிம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து நாட்டில் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.[9][10][11]

5வது ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை 17 ஓட்டங்களால் வென்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[12] ஆறாவது குழுப் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 2 இழப்புகளால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[13] 2018 மார்ச் 18 இல் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி வங்காளதேச அணியை 4 இழப்புகளால் வென்று சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.[14]

Remove ads

அணி வீரர்கள்

மேலதிகத் தகவல்கள் வங்காளதேசம், இந்தியா ...

சகீப் அல் அசன் சுற்றுப்போட்டி ஆரம்பத்தின் முன்னரே வங்காளதேச அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக லித்தன் தாசு விளையாடினார். மகுமுதுல்லா ரியாத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[18] 2018 மார்ச் 10 ஆட்டத்தின் போது "மெதுவான ஆட்டம்" காரணமாக இலங்கைத் தலவர் தினேஸ் சந்திமல் இரண்டு ஆட்டங்களுக்கு விளையாடத் தடை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக திசாரா பெரேரா இலங்கைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[19]

Remove ads

புள்ளிகள் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் வி, வெ ...
Remove ads

இ20ப தொடர்

1வது இ20ப

6 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
174/5 (20 நிறைவுகள்)
 இலங்கை
175/5 (18.3 நிறைவுகள்s)
இலங்கை 5 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: குசல் பெரேரா (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விஜய் சங்கர் (இந்த்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
  • இலங்கை அணி இந்திய அணிக்கெதிராக தனது மண்ணில் வென்ற முதலாவது இ20ப போட்டி இதுவாகும்.[20]

2வது இ20ப

8 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
139/8 (20 நிறைவுகள்)
 இந்தியா
140/4 (18.4 நிறைவுகள்)
லித்தான் தாசு 34 (30)
ஜய்தேவ் உனத்கட் 3/38 (4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 55 (43)
ரூபெல் ஒசைன் 2/24 (3.4 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: லிண்டன் அனிபால் (இல), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: விஜய் சங்கர் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.

3வது இ20ப

10 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
214/6 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
215/5 (19.4 நிறைவுகள்)
குசல் பெரேரா 74 (48)
முசுதபுல் ரகுமான் 3/48 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 5 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • வங்காளதேச அணி இ20ப போட்டிகளில் எடுத்த அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.[21]
  • இது இலங்கையின் இ20ப போட்டிகளில் 50வது தோல்வி ஆகும். இ20ப போட்டியில் ஒரு அணி 50 வது தோல்வி காண்பது இதுவே முதல் முறை.[22]

4வது ப20இ

12 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
152/9 (19 நிறைவுகள்)
 இந்தியா
153/4 (17.3 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 55 (38)
சர்துல் தாகூர் 4/27 (4 நிறைவுகள்)
மனீசு பாண்டே 42* (31)
அகிலா தனஞ்சய 2/19 (4 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: லிண்டன் அனிபால் (இல) and ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: சர்தூல் தாகூர் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக இரு பக்கங்களிலும் 19 நிறைவுகள் ஆடப்பட்டன.

5வது ப20இ

14 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
176/3 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
159/6 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 89 (61)
ரூபெல் ஒசைன் 2/27 (4 நிறைவுகள்)
இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • 20 நிறைவு துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஆறுகள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் ரோகித் சர்மா (72 ஆட்டங்களில் 75 ஆறுகள்) முதலிடம் பிடித்தார்.
  • இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.[23]

6வது ப20இ

16 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
159/7 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
160/8 (19.5 நிறைவுகள்)
குசல் பெரேரா 61 (40)
முஸ்தஃபிசூர் ரகுமான் 2/39 (4 நிறைவுகள்)
தமீம் இக்பால் 50 (42)
அகிலா தனஞ்சயா 2/37 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 2 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: மகுமுதுல்லா ரியாத்
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற வங்காளதேச அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
Remove ads

இறுதிப் போட்டி

18 மார்ச் 2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
166/8 (20 நிறைவுகள்)
 இந்தியா
168/6 (20 நிறைவுகள்)
சபிர் ரகுமான் 77 (50)
யுசுவேந்திரா சாகல் 3/18 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 56 (42)
ரூபெல் ஒசைன் 2/35 (4 நிறைவுகள்)
இந்தியா 4 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: தினேஷ் கார்த்திக் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரோகித் சர்மா (இந்) பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்த பத்தாவது வீரரானார்.[24]
  • இந்திய அணி ஓட்ட-துரத்தலில் தனது அதிகபட்ச ஓட்டத்தைப் பதிவு செய்தது. இதுவே இறுதிப் போட்டியில் ஒரு அணி ஓட்ட-துரத்தலின் போது எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[14][24]
  • இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.
Remove ads

குறிப்புகள்

  1. Thisara Perera captained Sri Lanka for their final two round-robin matches in Chandimal's absence.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads