அக்மோஸ்-மெரிதமுன்

From Wikipedia, the free encyclopedia

அக்மோஸ்-மெரிதமுன்
Remove ads

அக்மோஸ்-மெரிதமுன் (Ahmose-Meritamun or Ahmose-Meritamon) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ்- அரசி அக்மோஸ்-நெபர்தாரி இணையரின் மகளும், பார்வோன் முதலாம் அமென்கோதேப்பின் அக்காவும், மனைவியும் ஆவார்.[1] மிக அழகான இந்த அரசி இளமையில் மறைந்த போது, தேர் எல் பகாரியின் கல்லறையில், இவரது உடலை மம்மியாக அடக்கம் செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் அரசி அக்மோஸ்-மெரிதமுன், புதைத்த இடம் ...
விரைவான உண்மைகள் அக்மோஸ்-மெரிதமுன் படவெழுத்துக்களில் ...

அரசி அரசி அக்மோஸ்-நெபர்தாரிக்குப் பின்னர் அக்மோஸ்-மெரிதமுன் அமூன் கடவுளின் மனைவியாக வழிபடப்பட்டார். 1817-இல் கர்னாக் தொல்லியல் அகழாய்வின் போது அரசி அக்மோஸ்-மெரிதமுனின் சுண்ணாம்புக் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.[2] 1930-இல் தேர் எல் பகாரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது, அரசி அக்மோஸ்-மெரிதமுனின் மம்மி மரப்பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது.[3]

Thumb
தீபை நகரத்தின் கல்லறை எண் 359-இன் சுவரில், மேல் வரிசையில், இடமிருந்து வலம்: 18ஆம் வம்சம் முதல் 20-ஆம் வம்ச வரையிலான பார்வோன்களான முதலாம் அமென்கோதேப், முதலாம் அக்மோஸ், அரசி அக்மோஸ்-மெரிதமுன், அக்மோஸ்-சிதாமுன், அக்மோஸ்-ஹெனுத்தாமேகு, அக்மோஸ்-துமெரிசி, அக்மோஸ்-நெபெத்தா, அக்மோஸ்-சபையர், கீழ் வரிசையில், இடமிருந்து வலமாக: அரசி அக்மோஸ்-நெபர்தாரி, முதலாம் ராமேசஸ், இரண்டாம் அமென்கோதேப் இரண்டாம் மெண்டுகொதேப், செக்கனென்ரே தாவோ, நான்காம் ராமேசஸ், முதலாம் தூத்மோஸ் ஓவியங்கள்
Thumb
மரச் சவப்பெட்டியில் அரசி அக்மோஸ்-மெரிதமுனின் மம்மி
Remove ads

பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களின் மம்மி ஊர்வலம்

3 ஏப்ரல், 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து எகிப்தின் பதினேழாம் வம்சம் முதல் எகிப்தின் இருபதாம் வம்சம் வரையிலான புகழ்பெற்ற 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது அரசி அக்மோஸ்-மெரிதமுன் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது.[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads