அரிய கதிரியக்க ஓரகத்தனிமம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரிய கதிரியக்க ஓரகத்தனிமம் (trace radioisotope) என்பது இயற்கையில் அரிதாக அல்லது மிகக்குறைவாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்க ஐசோடோப்பு ஆகும். பொதுவாகப் பார்க்கையில், இத்தகைய கதிரியக்க ஓரிடத்தான்களின் அரை ஆயுள் காலத்தைப் பூமியின் வயதோடு ஒப்பிட்டு கணக்கிட்டால் அதைவிட சற்று குறைவாகவே உள்ளது. இதன் பொருள் தற்பொழுது அரிதாகக் காணப்படும் ஆதித் தனிமங்கள் பெருமளவில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான வாய்ப்பு தெரிகிறது. பல்வேறு இயற்கை நிகழ்வுகளின் மூலம் இத்தகைய அரிய கதிரியக்க ஒரிடத்தான்கள் தொடர்ந்து பூமியில் உற்பத்தியாகிக் கொண்டிருக்க வேண்டும். புளூட்டோனியம்–244 மட்டும் இவ்விதிக்கு மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில் இதனுடைய அரை ஆயுட்காலம் 80 மில்லியன் ஆண்டுகள் ஆகும். அதாவது பூமியின் உருவாக்கத்தின்போது எஞ்சி இருந்துள்ள இத்தனிமத்தின் அளவு, அரை ஆயுட்காலக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால் புதிய உற்பத்தி ஏதுமின்றி நிலையாக இருப்பது போல இருக்கிறது.

நிலையான அணுக்கருக்களின் மீது அண்டக் கதிர்கள் மோதித் தாக்கும் வினைகள், நீண்ட அரைஆயுட்கால கன அணுக்கருக்கள் சாதராணமாக ஆல்ஃபா மற்றும் பீட்டா கதிர்களை வெளியிட்டு சிதையும் வினைகள், (தோரியம்–232, யுரேனியம்–238 மற்றும் யுரேனியம்–235 போன்றவை) இயற்கையாகக் காணப்படும் யுரேனியம்-238 இன் தன்னிச்சையான அணுக்கரு பிளப்பு வினைகள், பின்புலக் கதிர்வீச்சினால் தூண்டப்படும் மூலகத் திரிவு வினைகள், (புளூட்டோனியம்–239[1] மற்றும் யுரேனியம்–236[2] போன்ற தனிமங்கள் இயற்கையான யுரேனியம் நியூட்ரானை கவர்வதன் மூலம் உருவாகின்றன.[3]) போன்றவை அரிய கதிரியக்க ஓரகத்தனிமம் உருவாக்கும் இயற்கை நிகழ்வுகளில் சிலவாகும்.

Remove ads

தனிமங்கள்

கதிரியக்க சிதைவின் வாயிலாக உருவாக்கப்படும் தனிமங்களின் பட்டியல் இங்குத் தரப்பட்டுள்ளது

பிற தனிமங்களின் ஓரிடத்தான்கள்:

  • டிரிட்டியம்
  • பெரிலியம்-7
  • பெரிலியம் -10
  • கார்பன்-14
  • புளோரின்-18
  • சோடியம்-22
  • சோடியம்-24
  • மக்னீசியம்-28
  • சிலிக்கான்-31
  • சிலிக்கான்-32
  • பாசுபரசு-32
  • கந்தகம்-35
  • கந்தகம்-38
  • குளோரின்-34m
  • குளோரின்-36
  • குளோரின்-38
  • குளோரின்-39
  • ஆர்கான்-39
  • ஆர்கான்-42
  • கால்சியம்-41
  • இரும்பு-60
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads