இரேடான் ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 86.அணு நிறை 222 ஆகும் அரை வாழ்வு நேரம் 3.8 நாள்களாகும். இது ஒரு நிறம், மணம், சுவையற்ற மந்த வாயுவாகும். இது கதிரியக்கத்தன்மை கொண்டது. யுரேனியம் சிதையும் போது இது கிடைக்கிறது.
காற்று மாசுக்களில் இது முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக் காரணமாக இரேடான் உள்ளது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் பயன்பட்டது.[1]