புரோமித்தியம்

அணு எண் 61 ஐக் கொண்ட வேதி தனிமம். From Wikipedia, the free encyclopedia

புரோமித்தியம்
Remove ads

புரோமித்தியம் அல்லது புரோமீத்தியம் (ஆங்கிலம்: Promethium (prəˈmiːθiəm/, /proʊˈmiːθiəm) ஒரு வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள தனிமம். இதன் வேதியியல் குறியீடு Pm, இதன் அணுவெண் 61. இதன் அணுக்கருவில் 84 நொதுமிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் புரோமித்தியம், தோற்றம் ...
Remove ads

குறிப்பிடத்தக்க பண்புகள்

புரோமீத்தியத்தின் நீண்ட வாழ்வுக்காலம் கொண்ட ஓரிடத்தான் 145Pm பீட்டாத் துகள் வெளியிடும் பொருள். இதன் அரை-வாழ்வுக்காலம் 17.7 ஆண்டுகளாகும். இது காமாக் கதிர்களை வெளியிடுவதில்லை என்றாலும் வெளிவிடும் பீட்டாத் துகள்கள் அதிக அணுவெண் கொண்ட தனிமங்களின் மீது விழுந்தால் அவை புதிர்க் கதிர்கள் (X-கதிர்கள்) வெளிவிடும். 145Pm என்னும் பொருள் எக்ஸ் கதிர்களும் பீட்டாக் கதிர்களும் வெளிவிடுகின்றன.

பயன்பாடுகள்

வரலாறு

பொகுஸ்லாவ் பிரௌனர் என்பவர் 1902இல் இத்தனிமம் இருக்கவேண்டும் என்பதை முன்கூறினார். ஹென்றி மோஸ்லி என்பவரும் 1914 ஆம் ஆண்டு, தனிம அட்டவணையில் உள்ள இடைவெளியைக் கொண்டு (61 ஆம் அணுவெண்ணுக்கான இடைவெளி) இக்கருத்துக்கு வலுவிருப்பதாகக் கூறினார். கடைசியாக 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் ஜாக்கப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிளெண்டனின், சார்லஸ் கோர்யெல் ஆகியோர் யுரேனிய சிதைவு இயக்கத்தின் விளைபொருட்களை ஆய்வு செய்தபொழுது புரோமித்தியத்தைக் கண்டுபிடித்து தனியே பிரித்தெடுத்துக் காட்டி நிறுவினார்கள். எனினும் 19477 இல்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர் [2] புரோமித்தியம் என்னும் பெயர் கிரேக்கத் தொன்மக் கதைகளில் வரும் புரோமீத்தியஸ் என்னும் டைட்டன் இனத்தவன் ஒலிம்ப்பஸ் மலையில் இருந்து நெருப்பை எடுத்து வந்து மாந்தகுலத்திற்குத் தந்தவன் என்பதில் இருந்து எடுத்து இட்டப் பெயர். இப்பெயரைச் சார்லஸ் கோர்யெல்லின் மனைவி மேரி கோர்யெல் பரிந்துரைத்தார் என்பர்.

1963ல், மின்மவணு-பரிமாற்ற முறை (ion-exchange methods) வழி அணு உலையின் கழிவுப்பொருளில் இருந்து 10 கிராம் புரோமித்தியத்தை அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் உருவாக்கினார்கள்.

கிடைக்கும் அளவு (மலிவு)

புரோமித்தியம் யுரேனிய சிதைவு அல்லது பிளவில், விளைபொருளாகக் கிடைக்கின்றது. மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாகவே இயற்கையில் கிடைக்கின்றது. யுரேனியக் கனிமமாகிய யுரேனினைட் என்னும் கனிமத்தில் நிறையளவில் குவிண்ட்டில்லியனில் ஒரு பங்களவே (1018) கிடைக்கின்றது. யுரேனினைட் என்னும் கனிமம் பிட்ச் பிளெண்டு என்றும் பரவலாக அறியப்படும் கனிமம் ஆகும்[3].

புரோமித்தியம் ஆண்ட்ரொமெடா நாள்மீன்பேரடையில் உள்ள HR 465 என்னும் விண்மீனில் இருந்து வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்தும் (ஒளி முதலான மின்காந்த அலைகள்), பிரிசிபைலிஸ்கி விண்மீன் என்னும் HD 101065 விண்மீனில் இருந்தும், HD 965. என்னும் விண்மீனில் இருந்தும் வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்து அங்கெல்லாம் புரோமித்தியம் இருப்பதற்கான தடயம் இருப்பதாக விண்ணியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.[4]

Remove ads

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads