கலிபோர்னியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
|naming=கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டதற்காக |discovered by=லாரன்சு பெர்க்கிலி தேசிய ஆய்வுகூடம் |discovery date=1950 }} கலிபோர்னியம் (Californium) என்பது கதிரியக்கத் தன்மை கொண்ட உலோகத் தனிமம். இதன் குறியீடு Cf, அணு எண் 98, அணு நிறை 248. இத்தனிமம் முதற்தடவையாக 1950 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கியூரியம் ஆல்ஃபா துகள்களால் மோத விடப்பட்ட போது பெறப்பட்டது. ஆக்டினைடு வரிசையில் உள்ள இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களில் ஆறாவதாகும். கலிபோர்னியம் 252 என்னும் இதன் ஓரிடத்தான் அண்மைக்கதிர் மருத்துவத்தில் பயன்படுகிறது.
</ref>
மிகவும் மாறுபட்டநியூட்ரான்களை கொடுக்கும் ஒரு தனிமமாகும் காலிபோர்னியம் 252 .இது தோற்றுவிக்கப் பட்டவிதம் விந்தையானது.யுரேனிய பிளவை ஆய்விலும் அணு ஆற்றல் ஆய்வின் பலனாகவும் பெறப்பட்ட தனிமம் இது.புளுட்டோனியம் தனிமத்தினைஅதிக செறிவுடையநியூட்ரான் பாய்வில் வைக்கும் போது,புளுட்டோனியம் காலிபோர்னியமாக மாற்றம் பெறுகிறது.இது (என்,ஆர்)வினை என்பது தெரிந்த ஒன்று.காலிபோர்னியத்தினை பெறுவது கடினமானது எனினும் மருத்துவத்திற்குப் போதுமான அளவு ஐக்கிய அமெரிக்க நாட்டில் இது தோற்றறுவிக்கப்பட்டுளது.ஆய்விற்காக சில கதிர் மருத்துவ மையங்களுக்கு அதனைக் கொடுத்து உதவி இருக்கிறார்கள். கதிரியக்கம் மூலம் சிதைவுறும் போது இது நியூட்ரான்களையும் வெளிப்படுத்துகிறது.97% காலிபோர்னியம் ஆல்ஃபா துகளைகளை உமிழ்கின்றன.இத்துகள்கள் கொள்கலனின் சுவர்களில் தடுக்கப் பட்டுவிடுகின்றன.மருத்துவத்தில் அதன் பங்கு இல்லை.3% காலிபோர்னியம் 252 கதிரியக்கம் காரணமாக 85.5 ஆண்டு அரை வாணாளுடன் உள்ளது.இதன் போது நான்கு நியூட்ரான்களும் காமா கதிரும் வெளிப்படுகின்றன.இந்த நியூட்ரான்களின் கதிர்வீச்சளவு காமாக் கதிர்களைப்போல் 1.7 மடங்கு அதிகமாக உள்ளது.இந் அளவுகள் ஒரு செ.மீ. தொலைவிற்கு அப்பால் இவ்வேற்பளவுகள் மாற்றம் கொள்கின்றன.இதற்கு முக்கிய காரணம் காலிபோர்னியம் சிதைவின் போது தோன்றும் சில சேய்தனிமங்களில் இருந்து தோன்றும் காமாக் கதிர்களே ஆகும்.
கலிபோர்னியம் தரும் நியூட்ரான்களின் ஒப்பு கதிரியல் விளைவு கூடுதலாக உள்ளது கவனிக்கப்பட வேண்டும்.கலிபோர்னியத்தின் ஒப்பு உயிரியல் விளைவு மூன்று என்று எடுத்துக் கொண்டால் ஒரு மைக்ரோ கிராம் காலிபோர்னியம்252 வும் ஒரு மில்லிகிராம் ரேடியமும் ஒரே விளைவுகளைக் கொடுப்பதாகக்கொள்ளலாம்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads