ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்map
Remove ads

ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆலாம் மேகா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Alam Megah LRT Station; மலாய்: Stesen LRT Alam Megah; சீனம்: 壮丽的自然风光) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3]

விரைவான உண்மைகள் KJ35 ஆலாம் மேகா Alam Megah LRT Station, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் சிலாங்கூர், சா ஆலாம், தாமான் பூங்கா நெகாரா, செக்சன் 27, ஆலாம் மேகா; போன்ற சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[4] இந்த நிலையம் மெயின் பேலஸ் வணிக வளாகத்திற்கு (Main Place Mall) அருகில் அமைந்துள்ளது.

Remove ads

அமைவு

கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது.

ஆலாம் மேகா நிலையம் சா ஆலாம், செக்சன் 27, ஆலாம் மேகா பகுதியில் (Alam Megah) அமைந்து இருப்பதால், ஆலாம் மேகா எனும் பெயர் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.

சா ஆலாம் மாநகராட்சி

சா ஆலாம் மாநகராட்சி (Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த ஆனையம் 7 ​​திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது.

கிளானா ஜெயா வழித்தடம்

கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]

ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு

இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.

கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6]

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads