இந்து சமய வரலாறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து மத வரலாறு (ஆங்கிலம்: History of Hinduism) என்பது இந்திய துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா, மற்றும் நேபாளம் [1] போன்ற நாடுகளில் இந்து சமயப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம், மற்றும் சுமார்த்தம் போன்ற பல பிரிவு சமைய கட்டுப்பாடுகளுடன் இரும்புக்காலம் தொட்டு கி.முவுக்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இம்மத கோட்பாடுகள் அனைத்தும் பழமையான வாழ்க்கைமுறை இந்திய கலாசாரங்கள் மற்றும் மரபுகளின் வேர் தோன்றல்களால் உருவானதாகும். இவற்றில் இந்திய கலாசாரமும், இந்திய மக்களின் மரபுகளும் இந்து மதத்தோன்றலுக்கு நாணயத்தின் இரண்டு பக்க தோற்றம் போன்று இரும்புக்காலம் தொட்டு உதவிபுரிந்து வந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே பழைய மதம் என்று இந்து மதம் அழைக்கப்படுகிறது. இந்து மத தோன்றலின்படி இதனை ஒருவரே தோற்றுவித்ததாக கூறமுடியாது.


இந்து மதத்தின் முதல் தோன்றல் வரலாற்றுக்கூற்றின்படி வேத காலம் என்று அழைக்கப்படும் கி.மு 1900 முதல் கி.மு 1400 ஆம் ஆண்டு வரையான காலகட்டம் ஆகும். [2][note 1] இதற்கு அடுத்த காலகட்டமான கி.மு 800 முதல் கி.மு 200 வரை இந்து மதத்திற்கு ஒரு திருப்பு முணையாக அமைந்தது. ஏனெனில் வேத சமயம் மற்றும் இந்து சமயம் என இருந்த இவை பிரிந்து மேலும் இந்து சமயம், மகாவீரரின் போதனைகளைக் கொண்டு சைன மதமும், புத்தரைத் தலைமையாகக்கொண்டு புத்த மதம் என வளரத்துவங்கியது. அதற்கு பிந்தைய காப்பிய காலம் மற்றும் புராணகாலமான கி.பி 200 ஆண்டு முதல் கி.பி 500 ஆம் ஆண்டு வரையான காலகட்டம் இந்துமதத்தின் பொற்காலம் ஆகும். இதற்கு காரணமாக விளங்கியவர்கள் இந்தியாவை ஆண்ட குப்த அரசர்கள் ஆவார்கள்.[சான்று தேவை] இவர்களின் காலத்தில் இந்து மதம் ஆறு பிரிவுகளாக பரிணாம விளக்கம் பெற்றது. அவை சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், வேதாந்தம், மற்றும் மீமாம்சம் போன்ற மெய்யியல் கொள்கைகள் ஆகும். இதே காலகட்டத்தில் தோன்றிய பக்தி இயக்கங்களின் தோன்றலின் காரணமாக தனிக் கடவுள் கொள்கையுடன் சைவம், வைணவம் என்ற பிரிவுகள் தோன்றின. இதன் காலம் கி.பி 650 முதல் கி.பி 1100 ஆகிய இந்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைவெளியான செவ்வியல் காலத்தில் தான் பாரம்பரிய இந்து மதம் வளர்ச்சி பெற்றது. மேலும் ஆதி சங்கரர் அருளிய அத்வைதம், பௌத்தம் பொன்ற பாரம்பரியமான அமைப்புகள் இந்து மதவளர்ச்சிக்கு உறுதுணையாக சிறந்தும் விளங்கின.

இந்து மதம் கி.பி 1200 முதல் கி.பி 1750 வரையிலான காலகட்டத்தில் இசுலாமியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தாலும் அதன் வளர்ச்சி இக்காலத்தில் பக்தி இயக்கங்களின் மூலம் முக்கியத்துவம் பெற்றது. [5][6] அதன் பின்வந்த காலமான காலனிய இந்தியாவில் பல மேற்கத்திய இயக்கங்களின் தொன்றல்களால் பிரம்மஞானம், பகுத்தறிவு சிந்தனை (Unitarianism) போன்றவை தோன்றியதின் காரணமாக பல இந்து சீர்திருத்த இயக்கங்கள் (Hindu reform movements) தோன்றின. பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பிரிக்கப்பட்ட இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சியின்போது இந்து மதம் பெரும்பானமை பெற்று முன்னிலையிலில் இருந்தது. தற்போது இந்த 20-ஆம் நூற்றாண்டில் உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும் இந்து மதம் இந்தியர்களிடம் பரவியுள்ளது. இதில் முக்கியமாக அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமான மக்கள் வாழுகிறார்கள்.

Remove ads

மேலும் பார்க்க

குறிப்புகள்

  1. There is no exact dating possible for the beginning of the Vedic period. Witzel mentions a range between 1900 and 1400 BCE.[3] Flood mentions 1500 BCE.[4]

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads