இரட்டைப்படைக் குளம்பி

From Wikipedia, the free encyclopedia

இரட்டைப்படைக் குளம்பி
Remove ads

இரட்டைப்படைக் குளம்பிகள் என்பன பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இதனை ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்று அறிவியலில் கூறுவர். ஆர்ட்டியோடாக்டிலா என்னும் இவ் ஆங்கிலச் சொல்லை ரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இவ் ஆங்கிலச்சொல், ஆர்ட்டியோசு (αρτιος) = இரட்டைப்படை எண் + டாக்டிலோசு (δακτυλος) = விரல் என்னும் இரு கிரேக்க மொழிச் சொற்களால் ஆன கூட்டுச்சொல். குளம்பு என்பது கால்களின் விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பு. குளம்புள்ள விலங்குகளைக் குளம்பிகள் என்று அழைப்பர். குளம்புள்ள விலங்குகளை ஆங்கிலத்தில் அங்குலேட் (ungulate) என்கின்றனர். அங்குலேட் என்னும் சொல் குளம்பு என்று பொருள் படும் அங்குலா (ungula) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெற்றது. இது 1802 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது[1]. இவ் உயிரின வரிசையில் பன்றிகள், நீர்யானைகள், ஒட்டகங்கள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகள் அடங்கும். இவ்விலங்குகளின் உடல் எடை இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால் அவை மீதும் ஈடான எடை விழுகின்றது. ஆனால் ஒற்றைப்படைக் குளம்பிகளில் (பெரிசோடாக்டில்களில், perissodactyls) பெரும்பாலான எடை மூன்றாவது விரலில் விழுகின்றது. இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு, அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள கணுக்கால் எலும்பின் (Talus, டாலசு எலும்பு) அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால் பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, குடும்பங்கள் ...
Thumb
இன்று வாழும் இரட்டைக்குளம்பிகளின் வலது முன்னங்கால்களின் எலும்பு அமைப்பு. இடமிருந்து வலமாக: பன்றி (இசுசு இசுக்ரோஃவா, Sus scrofa), செம் மான் (செர்வசு எலாஃவசு, Cervus elaphus), ஒட்டகம் (கேமலசு பாக்ட்ரியானசு, Camelus bactrianus). U = முன்கைப் பேரெலும்பு(ulna), R = முன்கை ஆரையெலும்பு(Radius bone), c = cuneiform, l = lunar, s = Scaphoid, u = Unciform, m = Magnum, td = Trapezoid. செம்மறியாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளில் இரண்டு விரல்களில் எடையை தாங்கும் நீளமான ஒன்றிணைந்த எலும்பு முழந்தாள் முன்னெலும்பு ஆகும்.

உலகில் ஏறத்தாழ 220 இரட்டைப்படைக் குளம்பு உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் மாந்தர்களின் பண்பாடு, வளர்ச்சி, நல்வாழ்வுக்கு மிக இன்றியமையாதவையாக இருக்கின்றன.

Remove ads

சொற்பிறப்பு

'ஆர்ட்டியோடாக்டிலா' என்ற சொல்லை இரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இந்த உயிரின வகைப்பாட்டியல் சொல்,

  • ஆர்ட்டியோசு (αρτιος)[3] = ஒரே மாதிரியான, சம அளவான (even)
  • டாக்டிலோசு (δακτυλος)[4] = விரல் (limb)

என்ற இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவாக்கினார்.

இங்கு விரல் என்பது, குளம்பு ஆக மாற்றம் அடைந்துள்ளது. குளம்பு என்பது விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைவுத் தகவு ஆகும். எனவே, குளம்புள்ள விலங்குகளை, குளம்பிகள் என்கிறோம்.

Remove ads

விலங்கியல் வகைப்பாடு

  • கீழ்கண்ட வகைப்பாடு சபால்டிங்( Spaulding et al., 2009) முறையை ஒட்டியது.[5]
  • இத்துடன் 2005 ஆண்டில் அறிவிக்கப்பட்ட, வாழும் பாலூட்டி குடும்பங்கள் ஆகும்.[6]
  • † என்ற குறியீடு உள்ள இவ்வுயிரினங்கள் ஊழிக்காலத்தவை;இன்று அவை உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • வரிசை Artiodactyla/Cetartiodactyla
    • பெருவரிசை Tylopoda
      • குடும்பம் †Anoplotheriidae (?)
      • குடும்பம் †Choeropotamidae(?)
      • குடும்பம் †Cainotheriidae
      • குடும்பம் †Merycoidodontidae
      • குடும்பம் †Agriochoeridae
      • குடும்பம் Camelidae4: (ஒட்டக, லாமா இனங்கள் - 6)
      • குடும்பம் †Oromerycidae
      • குடும்பம் †Xiphodontidae
    • பெருவரிசை Suina
    • பெருவரிசை Cetruminantia
      • வகைப்படா Cetancodontamorpha[5][7]
        • பேரினம்Andrewsarchus(?)
        • குடும்பம் †Entelodontidae
        • உள்வரிசை Cetancodonta
      • வகைப்படா Ruminantiamorpha
        • உள்வரிசை Tragulina
          • குடும்பம் †Amphimerycidae
          • குடும்பம் †Prodremotheriidae
          • குடும்பம் †Protoceratidae
          • குடும்பம் †Hypertragulidae
          • குடும்பம் †Praetragulidae
          • குடும்பம் Tragulidae5: chevrotains (6 இனம் )
          • குடும்பம் †Archaeomerycidae
          • குடும்பம் †Lophiomerycidae
        • உள்வரிசை Pecora
          • குடும்பம் Antilocapridae8: pronghorn (1 இனம் )
          • குடும்பம் Giraffidae9: ஒட்டகச்சிவிங்கி , Okapi (2 இனம் )
          • குடும்பம் †Climacoceratidae
          • குடும்பம் Moschidae6: musk deer (7 இனம் )
          • குடும்பம் †Leptomerycidae
          • குடும்பம் Cervidae7: deer (49 இனம் )
          • குடும்பம் †Gelocidae
          • குடும்பம் †Palaeomerycidae
          • குடும்பம் †Hoplitomerycidae
          • குடும்பம் Bovidae10(135 இனம் )
Remove ads

வாழிடமும், வளர் இயல்பும்

இவைகள் அன்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. ஆசுத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் இவைகள் மனிதர்களால் அறிமுகபடுத்தப்பட்ட விலங்கினங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.[8]

குளம்பு

இவ்விலங்குகளின் விரல்கள், குளம்புகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாற்றமுற்ற அக்குளம்புகள், இவ்விலங்குகளிடையே, எண்ணிக்கையில் வேறுபட்டு இருக்கின்றன. இக்குளம்புகள் எண்ணிக்கையில் வேறுபட்டாலும், இரண்டிரண்டாக, சம அளவில் இருக்கின்றன. அதனால் தான், இவ்விலங்குகளை இரட்டைப்படை விரல்கள் என்று பொருள்படும் ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்ற உயிரியல் வரிசையில் அமைத்துள்ளனர்.

இவ்விலங்குகளின் உடல் எடை, இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால், அவை மீதும் ஈடான எடை விழுகின்றது.ஆனால், ஒற்றைப்படைக் குளம்பிகளில்பெரும்பாலான எடை, மூன்றாவது விரலில் விழுகின்றது.

இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு யாதெனில், அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள, கணுக்கால் எலும்பின் டாலசு (Talus) எலும்பு அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால், பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]

Remove ads

காட்சியகம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads