இலட்சுமிபுரம், கொளத்தூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலட்சுமிபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் பகுதியில், 13°08′10.0″N 80°12′01.8″E (அதாவது, 13.136100°N, 80.200500°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கொளத்தூர், விநாயகபுரம், புழல், செங்குன்றம், மாதவரம், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், அகரம், ஜவஹர் நகர், பெரியார் நகர், வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் ஆகியவை இலட்சுமிபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். சென்னையில் வாழ்ந்த ஆற்றல் பெற்ற சித்தர்களில் ஒருவரான அண்ணாமலை சுவாமி சித்தர் இலட்சுமிபுரம் பகுதியில் வாழ்ந்து சமாதி நிலை அடைந்தார்.[1] கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் 300 வண்ணமீன் வளர்ப்புப் பண்ணைகளில் இலட்சுமிபுரம் மீன் வளர்ப்புப் பண்ணைகளும் அடங்கும்.[2] சட்டத்திற்குப் புறம்பாக அதிகாலை முதலே செயல்படும் சில மதுவிற்பனைக் கூடங்கள் இலட்சுமிபுரத்தில் இருப்பதாகக் காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது.[3]
Remove ads
போக்குவரத்து
இலட்சுமிபுரம் பகுதியானது எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரட்டை ஏரி சந்திப்பு பகுதிக்கு அண்மையில் உள்ளதால் இப்பகுதியும் மக்கள் நெரிசல் கொண்டதாகவே காணப்படுகிறது. 200 அடி உள்வட்டச் சாலை இதன் அருகிலேயே செல்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படுகிற பேருந்துகளில் அதிகளவு இலட்சுமிபுரம் பகுதியை ஒட்டிச் செல்லுகின்றன. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கும் பேருந்து சேவைகள் வழங்குகிற மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலும், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய புறநகர்ப் பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான விரைவு தொடருந்துகளும் சில நிமிடங்கள் பயணிகள் ஏற, இறங்க நின்று செல்லும் பெரம்பூர் தொடருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 6.5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. இங்கிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இலட்சுமிபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், இந்தியாவின் பல இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து சேவைகள் அளிக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். மத்திய இரயில் நிலையம், 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அயல்நாடுகளுக்கும் பயணம் செய்து கொள்ள வசதியாக, சுமார் 23 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
கல்வி
பள்ளிகள்
அரசு உயர்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளான வீரசவர்க்கார் நேதாஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, எவர்வின் வித்யாஷ்ரம், எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி மற்றும் சதீஷ் பாலாஜி பள்ளி ஆகியவை இலட்சுமிபுரத்திற்கு அருகிலுள்ள பள்ளிகளாகும்.
கல்லூரி
இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே, 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி எவர்வின் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
Remove ads
மருத்துவம்
24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரட்டை ஏரி குமரன் மருத்துவமனை, இரட்டை ஏரி சந்திப்பு அருகில் 200 அடி உள்வட்டச் சாலையில் அமைந்து அருகிலுள்ள ஊர்களிலுள்ள நோயாளிகளும் எளிதில் வந்து செல்லும் முறையில் பலனளிக்கிறது.[4] மேலும், பெரம்பூர் - செங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மாயா சிறப்பு மருத்துவமனையும் 24 மணி நேர சேவைகள் செய்து கொண்டிருக்கிறது.[5]
அரசியல்
இலட்சுமிபுரம் பகுதியானது, மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. சுதர்சனம். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கே. ஜெயக்குமார், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads