எம். ஏ. எம். மகரூப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகம்மது அப்துல்லா முகம்மது மகரூப் (ஆங்கிலம்: Mohamed Abdullah Mohamed Maharoof; பிறப்பு: 25 ஏப்பிரல் 1957; சின்ன மகரூப் எனவும் அழைக்கப்படுகிறார்.) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
மகரூப் 25 ஏப்பிரல் 1957இல் பிறந்தார்.[1] இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மகரூப்பின் உறவினர் ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
மகரூப் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் 2000 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்திற்கும் தெரிவானார்.[3] இவர் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2001 நாடாளுமன்ற தேர்தலில் மறு தடவை போட்டியிட்டார்.[4] மகரூப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுவின் வேட்பாளராக2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மத்தியில் நான்காவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார்.[5]
மகரூப் 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகானசபை உறுப்பினரானார்.[6][7][8] மகரூப் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் மத்தியில் இரண்டாவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார். இவர் 2012 இலங்கை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.[9]
மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 35,456 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[10][11][12][13][14]
Remove ads
அரசியல் வரலாறு
வாழ்க்கைக் குறிப்பு
மகரூப் 25 ஏப்பிரல் 1957ல் பிறந்தார். இவர் ஹிஜ்ரா வீதி, கிண்ணியாவில் வசிக்கிறார்.[16]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads