கடைக்குட்டி சிங்கம்
பாண்டிராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam), பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] கார்த்திக், சாயிஷா, அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படம் டி. இமானின் இசையில் வேல்ராஜின் ஒளிப்பதிவில், உருவாகியுள்ளது.[3] இத்திரைப்படம் தெலுங்கில் சின்ன பாபு என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.[4] இத்திரைப்படமானது சூலை 13, 2018 அன்று வெளியானது.
Remove ads
நடிப்பு
- கார்த்திக் - குணசிங்கம்
- சாயிஷா - இனியா
- அர்த்தனா பினு - பிரியதர்ஷினி
- சத்யராஜ் - ரணசிங்கம்
- பிரியா பவானி சங்கர் - பூம்பொழில் செல்லம்மா
- பானுப்ரியா - பஞ்சவன் மாதேவி
- விஜி சந்திரசேகர் - வனவன் மாதேவி
- பொன்வண்ணன் - தில்லியநாயகம்
- சூரி - சிவகமியன் செல்வன்
படப்பணிகள்
கார்த்திக் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா 2017இல் இயக்குநர் பாண்டிராஜூடன் இத்திரைப்படத்திற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.[5] நவம்பர் 9, 2017இல் சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன் தொடங்கியது.[6] 2018 இன் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தென்காசிக்குச் சென்றனர்.[7] தியாகராய நகரிலுள்ள நடிகை மனோராமாவின் இல்லத்தில் இப்படத்திற்காக சில காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.[8]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads