கந்தேகவுண்டன் சாவடி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தே கவுண்டன் சாவடி (Kandhe Goundan Chavadi) என்பது சுருக்கமாக க க சாவடி (K G Chavadi) என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது எட்டிமடை பேரூராட்சி மற்றும் மதுக்கரை தாலுகாவிற்கு உட்பட்டது.[4][5][6] இது சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இந்த ஊர் கோயம்புத்தூர் காந்திபுரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், உக்கடத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; எட்டிமடை 3 கி.மீ.; வாளையார் 7 கி.மீ தொலைவில் உள்ளன. இவ்வூர் அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[7][7][8][9]
பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம்
இந்த ஊரில் காவல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான பொருளாதாரம். கே ஜி சாவடியைச் சுற்றி சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நகரம் முதன்மையாக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தின் பரம்பரையாக உள்ளது.[10]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

