கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம்
கம்போங் பாரு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kampung Baru LRT Station; மலாய்: Stesen Kampung Baru; சீனம்: 甘榜峇鲁) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாவது கட்டமைப்பில் செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் சேர்க்கப்படவில்லை.
Remove ads
பொது
கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தில் தற்போது உள்ள ஐந்து நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும்.
கம்போங் பாருவின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ள கம்போங் பாரு நிலையம்; அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை (Ampang–Kuala Lumpur Elevated Highway) மற்றும் கிள்ளான் ஆறுக்கு அருகில் அமைந்துள்ளது.[3]
அமைவு
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் போலவே இந்த நிலையமும் கோலாலம்பூர் மாநகர மையத்தில் கிள்ளான் ஆறுக்கு குறுக்கே அமைந்துள்ளது; மற்றும் கம்போங் பாரு குடியிருப்பாளர்களை கோலாலம்பூர் மாநகர மையத்துடன் இணைக்கும் புகழ்பெற்ற சலோமா பாலத்திலிருந்து 130 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்போங் பாரு பகுதிக்கு சேவை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
நிலத்தடி நடைபாதைகள்
கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற நிலத்தடி நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான கட்டுமானமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன.
அனைத்து நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. நிலையத்தின் இரண்டு எதிர்த் திசைகளுக்கும் ஒரே ஒரு தீவு மேடை உள்ளது.
இந்த நிலையத்தில், தெரு மட்டத்திலிருந்து இரண்டு அணுகல் வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மற்றொன்றை விட பெரியது; மற்றும் முதன்மை நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
