கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்

கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்map
Remove ads

கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kampung Raja Uda Komuter Station; மலாய்: Stesen Komuter Kampung Raja Uda); சீனம்: 甘榜拉惹乌达) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கம்போங் ராஜா ஊடா Kampung Raja Uda, பொது தகவல்கள் ...

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1]

இந்த நிலையம் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி; ஆகிய பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]

Remove ads

பொது

கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா என்ற கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.

1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கம்போங் ராஜா ஊடா நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

சா ஆலாம் விரைவுச்சாலை

இந்த நிலையத்தில் இருந்து கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை; சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway) எனும் (கெசாஸ் நெடுஞ்சாலை) (Konsortium Expressway Shah Alam Selangor - KESAS); கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை (New Klang Valley Expressway - NKVE) ஆகிய நெடுஞ்சாலைகளுக்குச் செல்ல 10 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும்.[3]

தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads