கர்நாடக கும்ப மேளா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்நாடக கும்ப மேளா கர்நாடகத்தில் மைசூர் மாவட்டத்தில் டி.நரசிப்புரா வட்டத்தில் உள்ள திருமகூடலு என்ற கிராமத்தில் நடைபெறுகின்ற விழாவாகும். [1]
திரிவேணி சங்கமம்
திருமகூடலு கிராமத்தில் கீழ்க்கண்ட மூன்று ஆறுகளும் ஒன்றுசேரும் இடம் திருமகூடலு திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. [1]
- குடகு மாவட்டம் தலைக்காவிரியில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு, ஹாசன், மண்டியா, மைசூரு ஆகிய பகுதிகளை கடந்து திருமகூடலுவில் சேருகிறது.
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் கபிலா ஆறும் திருமகூடலுவில் இணைகிறது.
- இந்த இரு ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் குப்தகாமினி என்ற ஆறு பிறக்கிறது.
Remove ads
1989
வட மாநிலங்களில் உள்ள திரிவேணி சங்கமங்களில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. அவ்விழாவிற்குச் செல்ல முடியாத தென்இந்திய மக்களுக்காக திருமகூடலு திரிவேணி சங்கமத்தில் 1989இல் முதன்முறையாக கும்ப மேளா நடத்தப்பட்டது. அதன்பின்னர் 10 முறை திருமகூடலுவில் கும்பமேளா நடந்துள்ளது. இதற்கு முன்பாக 2016இல் நடைபெற்றது. மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இவ்வாண்டு அவ்விழா பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை நடைபெற்றது. [1] பிரயாக்ராஜ், உஜ்ஜயினி, நாசிக், அரித்வார் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கொரு முறை சுழற்சி முறையில் நடைபெறுவதைப் போல மூன்று ஆண்டுகளுக்கொரு முறை இவ்விழா நடத்தப்பெறுகிறது. [2]
Remove ads
ஏற்பாடுகள்
விழாவிற்கான ஏற்பாடுகளை மைசூரு மாவட்ட நிர்வாகம் செய்தது. விழாவையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் வருகை தர ஆரம்பித்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பக்தர்களின் வசதிக்காக தடுப்பு வேலிகளும், தற்காலிக பாலங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் உடைமாற்றும் அறை, தங்குமிடம், தற்காலிக கழிவறை வசதியும் செய்து தரப்பட்டிருந்தது.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads