கலிமந்தான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிமந்தான் (ஆங்கிலம்: Kalimantan; மலாய்: Kalimantan; இந்தோனேசியம்: Kalimantan (wilayah Indonesia); சீனம்: 加里曼丹) என்பது போர்னியோ தீவில் இந்தோனேசியாவின் பகுதியாகும். போர்னியோ தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதி கொண்டுள்ளது. கலிமந்தான் நிலப்பரப்பு 544150 ச.கி.மீ. ஆகும். 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 16625796 ஆகும்.[2]

கலிமந்தானின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியாவின் கிழக்கு மலேசியா பிரதேசத்தின் சபா, சரவாக் மாநிலங்களும் மற்றும் புருணை நாடும் உள்ளன.[2]
2019-இல், இந்தோனேசியாவின் அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), இந்தோனேசியாவின் தலைநகர் கலிமந்தானுக்கு மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். சனவரி 2022-இல் இந்தோனேசிய நாடாளுமன்றம் அந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தலைநகர் மாற்றம் 10 ஆண்டுகள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3][4]
Remove ads
பெயர்க் காராணம்
சமசுகிருத மொழியில் காலமந்தனா (Kalamanthana) என்பதற்கு மிகவும் சூடானது (Burning Weather Island) என்று பொருள். உள்ளூர் மக்கள் இப்பகுதியை கலிமந்தான் என அழைக்கிறார்கள்.[5]
போர்னியோவின் கிழக்குப் பகுதியின் பழங்குடியின மக்கள், 16-ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய ஆய்வாளர் ஜார்ஜ் டி மெனெஸ் (Jorge de Menezes) என்பவரை முதன்முதலாகத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் தீவை புலு கிலேமந்தன் (Pulu K'lemantan) அல்லது கலிமந்தான் (Kalimantan) என்று குறிப்பிட்டனர்.[6][7]
Remove ads
கலிமந்தானில் இந்தோனேசியாவின் மாநிலங்கள்
இந்தோனேசியாவில் உள்ள 33 மாநிலங்களில், ஐந்து மாநிலங்கள் கலிமந்தான் பகுதியில் உள்ளன. 1945-ஆம் ஆண்டில் இருந்து 1956-ஆம் ஆண்டு வரையில் கலிமந்தான் ஒரே ஒரு மாநிலமாக நிர்வகிக்கப்பட்டது. அதன் பின்னர் 1956-ஆம் ஆண்டில், கிழக்கு கலிமந்தான், தெற்கு கலிமந்தான் மற்றும் மேற்கு கலிமந்தான் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
பின்னர் 1957-ஆம் ஆண்டில், மத்திய கலிமந்தான் மாநிலம் தற்போதுள்ள தெற்கு கலிமந்தான் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 25 அக்டோபர் 2012 வரை, வடக்கு கலிமந்தான் மாநிலம், கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்படும் வரை நான்கு மாநிலங்கள் மட்டுமே இருந்தன.[8]
கலிமந்தான் மாநிலங்கள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads