சமாரிண்டா
இந்தோனேசியாவின் கிழக்குக் களிமந்தான் மாகாணத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமாரிண்டா (இந்தோனேசியம்: Samarinda; ஆங்கிலம்: City of Samarinda) என்பது இந்தோனேசியா, போர்னியோ, கிழக்கு கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாநகரம் மகாகாம் ஆற்றின் (Mahakam River) கரையில் 718 கிமீ2 (277 சதுர மைல்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் வாழத் தகுதியான முதல் பத்து நகரங்களில் சமாரிண்டாவும் ஒன்று என தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள இந்த மாநகரம்[6][7] கிழக்கு கலிமந்தான் மனித வளர்ச்சி (பொருளியல்) கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளது.[8] 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 868,499 மக்கள்தொகையுடன், போர்னியோ தீவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது.[2]
கிழக்கு கலிமந்தானின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும்;[9] மற்றும் ஐந்தாவது பெரிய இறக்குமதியாளராகவும் விளங்கும் சமாரிண்டா மாநகரம்,[10] கிழக்கு கலிமந்தானில் அதிக எண்ணிக்கையிலான வங்கி தலைமையகங்களைக் கொண்ட நகரமாகவும் தடம் பதிக்கிறது
Remove ads
பொது
சமாரிண்டாவிற்கு அருகாமையில் இருக்கும் ஓர் இந்துக் கோயிலின் கல்வெட்டுப் பதிவுகளின் மூலமாக, ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர் என்று அறியப்படுகிறது. ஆயினும் 1668-ஆம் ஆண்டில் தென்பகுதியில் இருந்து பூகிஸ் மக்கள் இங்கு குடியேறினர். காலப்போக்கில் இவர்கள் கோவா சுல்தானகம் எனும் (Sultanate of Gowa) இராச்சியத்தை உருவ்வாகினர்.[11]
1846-இல் இடச்சுக்காரர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றினர். 1959-இல் இந்தோனேசிய அதிபர் சுகார்னோ ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்த நகரத்தின் மக்கள் தொகை வேகமாக வளரத் தொடங்கியது.
1942-இல் சமாரிண்டா ஒரு சிறிய நகரமாக இருந்தது. அதன் அருகே பல சிறிய எண்ணெய் வயல்களும் இருந்தன. இரண்டாம் உலகப் போரில் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளை சப்பானியர்கள் கைப்பற்றினர்.
சப்பானிய ஆக்கிரமிப்பு
இரண்டாம் உலகப் போரின் போது, சப்பானியப் பேரரசு 1942-ஆம் ஆண்டு இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளை ஆக்கிரமித்ததன். அதில் ஒரு பகுதியாக சமாரிண்டா நகரத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
1942-ஆம் ஆண்டு முதலாம் பாலிக்பாப்பான் போர் (1942) போரிலும் (Battle of Balikpapan), 1945-ஆம் ஆண்டு இரண்டாம் பாலிக்பாப்பான் போர் (1945) (Battle of Balikpapan), போரிலும் சமாரிண்டா நகரம் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளால் தாக்கப்பட்டது.
Remove ads
மக்கள்தொகை
2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சமாரிண்டா மாநகரத்தின் மக்கள்தொகை 868,499 ஆக இருந்தது. 2023-2024-இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 0.77% ஆகும். சமாரிண்டாவின் பெரும்பான்மையான மக்கள் பூர்வீக இந்தோனேசியர்; மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அரேபியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.. சமாரிண்டாவில் அமெரிக்கர்கள், கனடியர்கள், ஐரோப்பியர்கள், சப்பானியர்கள், பிலிப்பீன்சு மற்றும் கொரியர்கள் பணிபுரிகின்றனர்.[2]
Remove ads
மகாகாம் ஆற்றுப் பகுதி
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
