காஜாங் 2 தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

காஜாங் 2 தொடருந்து நிலையம்map
Remove ads

காஜாங் 2 தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kajang 2 Railway Station; மலாய்: Stesen Kajang 2) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங், பண்டார் பாரு பாங்கி, காஜாங்2 நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் பொது தகவல்கள், அமைவிடம் ...

காஜாங் நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையம் காஜாங் மற்றும் பாங்கி பகுதிகளுக்கு சேவை செய்கிறது. இரண்டு அடுக்கு காஜாங் 2 நிலையத்தின் கட்டுமானம் மார்ச் 2018-இல் நிறைவடைந்தது.

இந்த நிலையம், காஜாங் நிலையத்திற்கும்; மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திற்காக கட்டப்பட்ட யூகேஎம் கொமுட்டர் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. மலேசியாவில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தை யூகேஎம் என்று அழைப்பது வழக்கம்.

கோலாலம்பூர் மாநகருக்குச் செல்ல விரும்பும் பய்ணிகள், இந்த நிலையத்தில் இருந்து, காஜாங் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து இலகு தொடருந்துகளில் (MRT Kajang Line) செல்லலாம். காஜாங் 2 தொடருந்து நிலையத்தின் கட்டடக்கலை வடிவமைப்பு, இசுவான் & மெக்லாரன் கட்டிடக் கலை நிறுவனத்தின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[1]

Remove ads

பொது

550 ஏக்கர் நிலப்பரப்பில் காஜாங்2 நகரத்தை உருவாக்கிய எம்.கே.எச் நிறுவனத்தினால் (MKH Berhad); இந்தப் புதிய காஜாங் 2 தொடருந்து நிலையமும் கட்டப்பட்டது. RM 33 மில்லியன் செலவில், ஓர் ஆண்டிற்கு 550,000 பயணிகள் பயன்படுத்தும் நிலையில் இந்த நிலையம் கட்டப்பட்டது.[2]

எதிர்காலப் பயன்பாட்டிற்காக அருகிலுள்ள நிலத்தில் 200 வாகனங்கள் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும் 2,000 வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமளிக்கும் வகையில், பல மாடி வாகனங்கள் நிறுத்தும் கட்டிடமும் உருவாக்கப்படுள்ளது.[3]

Remove ads

பயன்பாடு

இந்த நிலையம் 2020-இல் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயன்பாட்டிற்கு தாமதமானது. இருப்பினும் மார்ச் 13, 2023-இல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.[4]

தற்போது வார நாட்களில் 46 தொடருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன; வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் 33 தொடருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. உச்ச நேரத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும்; வழக்கமான நேரத்தில் 60 நிமிடங்களுக்கு ஒரு முறையும் தொடருந்து சேவைகள் உள்ளன.[5]

Remove ads

பேருந்து சேவைகள்

மேலும் காண்க

காஜாங் 2 நிலையக் காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads