கிளன்மேரி எல்ஆர்டி நிலையம்
கிளன்மேரி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் அல்லது கிளன்மேரி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Glenmarie LRT Station அல்லது CGC-Glenmarie LRT Station; மலாய்: Stesen LRT Glenmarie; சீனம்: 格林瑪麗站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா, சுபாங், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையம் தற்போது சா ஆலாம் வழித்தடத்திற்காக கட்டுமானத்தில் உள்ளது. கட்டுமானம் நிறைவடைந்த பின்னர் இந்த நிலையம் ஒரு பரிமாற்ற நிலையமாகச் செயல்படும்; மற்றும் 2025-இல் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[3][4]
Remove ads
அமைவு
கிளன்மேரி எனும் பெயரை இந்த எல்ஆர்டி நிலையம் பகிர்ந்து கொண்டாலும், கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் வழித்தடத்தின் விரிவாக்கத்தில் உள்ள கிளன்மேரி கொமுட்டர் நிலையத்துடன் ஒரு பரிமாற்ற நிலையமாக இணைந்து செயல்படாது. கிளன்மேரி தொழில் பூங்காவிற்கு அருகில் ஏறக்குறைய 2.6 கிமீ தொலைவில் கிளன்மேரி கொமுட்டர் நிலையம் அமைந்துள்ளது.
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம், SS7 சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில், கிளானா ஜெயாவின் அருகில் அமைந்துள்ளது.
கிளன்மேரி
SS7 சாலை, கிளன்மேரி ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.
சுபாங் வானூர்தி நிலையம்
சுபாங் ஜெயா, கிளானா ஜெயா, சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா, கோத்தா டாமன்சாரா, ஆரா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், கிளன்மேரி நகரத்திற்கு அருகில் உள்ளன.
கிளன்மேரி நகரத்திற்கு அருகில் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது.
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads