குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்

காஜாங் வழித்தட எம்ஆர்டி நிலையம் From Wikipedia, the free encyclopedia

குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்map
Remove ads

குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kwasa Sentra MRT Station; மலாய்: Stesen MRT Kwasa Sentra) என்பது மலேசியா, சிலாங்கூர், குவாசா டாமன்சாரா செக்சன் U4 நகர்ப் பகுதியில்; எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் KG05 குவாசா சென்ட்ரல், பொது தகவல்கள் ...

இதற்கு முன்னர் காஜாங் வழித்தடம் என்பது சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ், இந்த நிலையம் திசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.[2]

Remove ads

நிலைய அம்சங்கள்

குவாசா சென்ட்ரல் நிலையம், எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இந்த நிலையத்துடன் ஒரு பெரிய ஊட்டி பேருந்து முனையம் (Feeder Bus Terminal); மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

நிலைய இருப்பிடம்

இந்த நிலையம், எதிர்காலத் திட்டத்தில் உள்ள குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்ட வளாகத்திற்குள் அமைந்துள்ளது. அந்த வளாகத்திற்குள் அமைந்து இருக்கும் இரண்டு நிலையங்களில் குவாசா சென்ட்ரல் நிலையமும் ஒன்றாகும்; மற்றொரு நிலையம் குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் ஆகும். குவாசா சென்ட்ரல் நிலையத்திற்கு அருகில் வேறு கட்டிடங்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையம் சுங்கை பூலோ சாலையில் இருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும் புதிதாக கட்டப்பட்ட ஒரு புதிய சாலையின் வழியாக குவாசா சென்ட்ரல் நிலையத்தை அணுகலாம்.

நிலையக் கட்டுமானத்திற்குப் பின்னர், அதன் பெயரை உறுதி செய்வதற்கு முன்னர், இந்தக் குவாசா சென்ட்ரல் நிலையம்; தாமான் இண்டஸ்ட்ரி சுங்கை பூலோ என்ற செயல்பாட்டுப் பெயரால் அறியப்பட்டது.

நிலைய அமைப்பு

L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயிகள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் நுழைவாயில் A,பேருந்து முனையம், வாடகை கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம்
Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

இந்த நிலையம் நுழைவாயில் A மற்றும் நுழைவாயில் B என இரண்டு நுழைவாயில்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, ​​நுழைவாயில் A மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த நுழைவாயில் A; ஊட்டி பேருந்து நிறுத்தம், வாடகை கார்கள் நிறுத்துமிடம், பயணிகள் இறங்குமிடம் போன்ற வசதிகளுக்கு வழிவகுக்கிறது. நுழைவாயில் B தற்போது மூடப்பட்டுள்ளது; நிலையத்தின் கிழக்குப் பகுதி மேம்படுத்தப்பட்ட பின்னர் திறக்கப்படும்.

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இடம் ...
Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

காட்சியகம்

குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2016 - 2025):

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads