கெருகம்பாக்கம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெருகம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் பெருநகரமான சென்னையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் தொழில்துறை சுற்றுப்புறமாகும்.இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வட்டத்தைச் சேர்ந்தது. இது சென்னை நகரின் புறநகர்ப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
குன்றத்தூர் சாலையில், போரூர் சந்திப்பிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு சென்னையில் அமைந்துள்ள கெருகம்பாக்கம், வடக்கில் மௌலிவாக்கம், கொளப்பாக்கம் மற்றும் தெற்கில் கோவூர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. பிற அண்டை பகுதிகளாக போரூர், மாங்காடு, வளசரவாக்கம், ஐயப்பன்தங்கல், குன்றத்தூர் ஆகியவை அடங்கும்.
மக்கள்தொகை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கெருகம்பாக்கத்தின் மொத்த மக்கள் தொகை 11,551 ஆகும், இதில் 5,949 பேர் ஆண்கள் மற்றும் 5,602 பேர் பெண்கள் ஆவர். பாலின விகிதம் 942 ஆகவும், மாநில சராசரி 996 ஆகவும் இருந்தது. 0 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,445 ஆகும், இது கெருகம்பாக்கத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.51% ஆகும். தமிழக மாநில சராசரியான 943 உடன் ஒப்பிடும்போது, கெருகம்பாக்கத்தில் குழந்தை பாலின விகிதம் சுமார் 841 ஆக இருந்தது. கல்வியறிவு விகிதம் 88.93% ஆக இருந்தது, இது மாநில சராசரியான 80.09% ஐ விட அதிகமாக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு 92.87% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 84.80% ஆகவுமே உள்ளது.[1] ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)யின் கீழ் கெருகம்பாக்கம் உள்ளது.
Remove ads
போக்குவரத்து
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை, ஒரு பாதையைக் கொண்டுள்ளது. இதனருகில் முன்மொழியப்பட்ட போரூர் மெட்ரோ நிலையம் பாய் கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து 3 கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கலாம்.[2]
இரயில்வே
பல்லாவரம் ரயில் நிலையம், இதன் அருகிலுள்ள ரயில் நிலையமாகும், இது கெருகம்பாக்கத்திலிருந்து (கவுல் பஜார் வழியாக) 7 கி.மீ. தொலைவில் உள்ளது. கிண்டி இரயில் நிலையம் கெருகம்பாக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.
எம். டி. சி.
எம். டி. சி. கெருகம்பாக்கம் வழியாக கணிசமான எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்குகிறது. வாகனப் பகிர்வும் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அருகிலுள்ள பேருந்து நிலையமாக ஐயப்பன்தங்கல் உள்ளது, இது கெருகம்பாக்கத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாவது மிக அருகில் உள்ள பேருந்து நிலையமான குன்றத்தூர் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
2016 ஆம் ஆண்டு [புதுப்பிக்கப்பட்ட] தரவுகளின்படி, கெருகம்பாக்கத்தில் தொடக்க, இடைநிலை, மேல்நிலை, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. கெருகம்பாக்கத்தில் உள்ள சில புகழ்பெற்ற நிறுவனங்கள் பி. எஸ். பி. பி மில்லினியம் பள்ளி, லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் ஆகும்.[3] வேலம்மாள் போதி வளாகம், பொன் வித்யாஷ்ரம், லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் இன்னும் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் அருகிலுள்ள கொளப்பாக்கத்தில் அமைந்துள்ளன.[4]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads