கெர்சன் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

கெர்சன் மாகாணம்
Remove ads

கெர்சன் மாகாணம் உக்ரைன் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும். இது உக்ரைனின் தெற்கில் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது கிரிமியாவிற்கு வடக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும். 28,461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 10,16,707 மக்கள் தொகையும் கொண்ட கெர்சன் மாகாணத்தில், பழத்தோட்டங்கள் அதிக உள்ளதால், இதனை உக்ரைன் நாட்டின் பழக்கூடை என்று அழைக்கப்படுகிறது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, உருசியர்கள் கெர்சன் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி, தனது கைப்பாவை ஆளுநரை நியமித்துள்ளது.

விரைவான உண்மைகள் கெர்சன் மாகாணம் Херсонська область, நாடு ...
Remove ads

புவியியல்

கெர்சன் மாகாணத்தில் வடக்கில் தினிப்ரோவ்ஸ்க் மாகாணம், தெற்கில் சர்சைக்குரிய கருங்கடல் மற்றும் கிரிமியா தன்னாட்சிக் குடியரசும், மேற்கில் மைக்கோலைவ் மாகாணமும், கிழக்கில் அசோவ் கடல் மற்றும் சப்போரியா மாகாணமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கெர்சன் மாகாணத்தின் நடுவில் தினேப்பர் ஆறு வடக்கிலிருது, தெற்காக பாய்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கெர்சன் மாகாணத்தின் மக்கள் தொகை 1,083,367 ஆகும். மக்கள் தொகையில் பெண்கள் 53.3% ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 38 ஆக உள்ளது. இம்மாகாண மக்கள் தொகையில் 61.5% நகர்புறங்களில் வாழ்கின்றனர். இதன் 38.5% அல்லது 467,600 பேர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர்.

  • உக்ரைனிய மொழி பேசுவோர் - 82.0%
  • உருசிய மொழி பேசுவோர் – 14.1%
  • பெலேருஸ் மொழி பேசுவோர் – 0.7%
  • மெஸ்கெட்டியன் துருக்கிய மொழி பேசுவோர் – 0.5%
  • கிரிமிய தார்த்தர் மொழி பேசுவோர் – 0.5%
  • பிறர்– 2.2%
Remove ads

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு

2 மார்ச் 202 அன்றுஉக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் நடைபெற்ற கெர்சன் சண்டையின போது[5], 2 மார்ச் 202 அன்று உருசிய இராணுவம், கெர்சன் நகரத்தையும் கைப்பற்றியது.[6] பின்னர் 23 மார்ச் 2022 அன்று கெர்சன் மாகாணம் முழுவதையும் கைப்பற்றியது. கெர்சன் மாகாணத்தை நிர்வகிக்க உருசிய ஆதரவு ஆளுநரை இராணுவம் நியமித்துள்ளது. [7] [8]

நிர்வாகப் பிரிவுகள்

Thumb
கெர்சன் மாகாணச் செயலகக் கட்டிடம்

கெர்சன் மாகாணம் 18 மாவட்டங்களையும், 9 நகரங்களையும், 30 பேரூராட்சிகளையும், 658 கிராமங்களையும்கொண்டது. 2015-இல் கெர்சன் நகரத்தை 3 நகர்புற மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[9]

மேலதிகத் தகவல்கள் பெயர், உக்ரைனியப் பெயர் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads