கொளத்தூர் (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொளத்தூர் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரின் வடமேற்கில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும். தொகுதி சீரமைப்பு காரணமாக வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சில பகுதிகளும் இணைக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உருவானது.[1]
Remove ads
அமைவு
- இங்கிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கி.மீ. தொலைவிலும்,
- சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 19 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
- சென்னைப் புறநகர் பேருந்து நிலையமான கோயம்பேடு 8 கி.மீ. தொலைவிலும்,
- ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும்
நவீன பேருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
அருகமைந்த பகுதிகள்
- பெரம்பூர்,
- திரு. வி. க. நகர்,
- செம்பியம்,
- பெரவள்ளூர்,
- குமரன் நகர்,
- இலட்சுமிபுரம்,
- விநாயகபுரம்,
- அயனாவரம்,
- அகரம்,
- வில்லிவாக்கம்,
- புழல்,
- ஜவஹர் நகர்,
- பொன்னியம்மன்மேடு,
- பூம்புகார் நகர்,
- பெரியார் நகர்.
போக்குவரத்து
அருகமைந்த இரயில் நிலையங்கள்
- வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்,
- பெரம்பூர் லோகோ வொர்க்ஸ்,
- பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ்,
- பெரம்பூர் தொடருந்து நிலையம்.
நெடுஞ்சாலைகள்
கொளத்தூரின் அருகே கல்கத்தா செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூரை தொட்டுக்கொண்டு உள் வட்டச் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக அண்ணா நகருக்கு 10 நிமிடங்களில் செல்ல முடியும்.
சேவை அலுவலகங்கள்
அஞ்சல் துறை
கொளத்தூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600099.
வாகனப் பதிவுத் துறை
வாகனங்கள் பதிவுகள் மற்றும் அனுமதிக்கும் துறை அலுவலகமான 'வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்', சென்னை (வடக்கு), இரட்டை ஏரி சந்திப்பு இடத்திலிருந்து மாதவரம் நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. தொலைவிலுள்ளது.
கல்வி
பள்ளிக்கூடங்கள்
கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன:
- எவர்வின் மெட்ரிக் பள்ளி
- தொன் போஸ்கோ உயர்நிலைப் பள்ளி, அண்ணா சிலை
- சதீஷ் பாலாஜி மெட்ரிக் பள்ளி
- பாலாஜி மெட்ரிக் பள்ளி
- எவர்வின் வித்யாஷ்ரம் (சி.பி.எஸ்.இ.)
- அரசு உயர்நிலைப்பள்ளி
கல்லூரி
மருத்துவமனைகள்
கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன:
- டி.ஆர்.ஜே. மருத்துவமனை
- க்ளூனி மருத்துவமனை
- குமரன் மருத்துவமனை
- மாயா நர்ஸிங் ஹோம்
- பி.பி. மருத்துவமனை
பொழுதுபோக்கு
திரை அரங்குகள்
கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட திரையரங்குகள் உள்ளன.
- 'கங்கா', 'காவேரி' மற்றும் 'யமுனா' திரையரங்குகள்.
முன்னர் 'மூகாம்பிகை' மற்றும் 'குமரன்' திரையரங்குகள் இருந்தன. ஆனால் தற்போது, அவை இடிக்கப்பட்டு, அடுக்ககங்களாக மாற்றப்பட்டு விட்டன.
பூங்காக்கள்
- சக்திவேல் நகரில் அமைந்துள்ள பூங்கா
- அஞ்சுகம் நகரில் அமைந்துள்ள பூங்கா
வர்த்தகம்
வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனை
கொளத்தூர், வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தெற்காசியாவின் முக்கியப் பங்களிப்பு மையமாக விளங்குகிறது. இங்கிருந்து, சிங்கப்பூர் மற்றும் இன்ன பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வண்ண மீன்கள் ஏற்றுமதியாகின்றன.
மேற்கோள்கள்
அமைவிடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads