கோன்லே எம்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங். கோன்லே சாலையில் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

கோன்லே எம்ஆர்டி நிலையம்map
Remove ads

கோன்லே எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Conlay MRT Station அல்லது Conlay–Kompleks Kraf Station; மலாய்: Stesen MRT Conlay–Kompleks Kraf) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங். கோன்லே சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புக்கிட் பிந்தாங் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[1]

விரைவான உண்மைகள் PY22 கோன்லே, பொது தகவல்கள் ...
Remove ads

அமைவு

இந்த நிலையம் 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும்; இசுடோனர் சாலையில் (Jalan Stonor); புக்கிட் பிந்தாங். கோன்லே சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.[2] இந்த நிலையத்திற்கு அருகில் கோன்லே கைவினை வளாகம் (Jalan Conlay Craft Complex); மற்றும் ராயல் சூலான் தங்கும் விடுதி (Royale Chulan Hotel) ஆகியவை உள்ளன.[1]

வரலாறு

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.  PY21  கேஎல்சிசி எம்ஆர்டி நிலையத்திற்கும்;  PY23  துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு  PY22  ஆகும்.[3]

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் கோன்லே நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.

அதன் பின்னர் இந்த  PY22  கோன்லே எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.[2]

நிலத்தடி கட்டுமானங்கள்

எம்ஆர்டி நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தின் கீழ் கோன்லே எம்ஆர்டி நிலையம் நிலத்தடியில் உருவாக்கப்பட்டது. 2016 மார்ச் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 15.47 பில்லியன் மதிப்பிலான கட்டுமான கட்டமைப்புகள் எம்ஆர்டி நிறுவனத்தால் எம்எம்சி-கமுடா (MMC-Gamuda) நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும்.

13.5 கிலோமீட்டர் (8.4 மைல்) நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தில்,  PY16  செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தொடங்கி  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வரையிலான நிலையக் கட்டுமானப் பணிகளும் அடங்கும்.[4][5][6] அனைத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளன. கோன்லே எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[7][8]

Remove ads

ஒருங்கிணைந்த கட்டணப் பரிமாற்றம்

5 கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் 12 புத்ராஜெயா வழித்தடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த ஒரு கட்டணப் பரிமாற்றத் தளம் அமைக்கப்படுவதற்கு கோன்லே நிலையத்தின் நிலத்தடியில் திட்டமிடப்பட்டது; செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த ஒருங்கிணைப்பு திட்டம் கைவிடப்பட்டது.[9]

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

இந்த நிலையத்திற்கு மொத்தம் 2 நுழைவாயில்கள் உள்ளன. இரண்டு நுழைவாயில்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பக்கங்களில் அமைந்துள்ளன; நுழைவு A வடக்கிலும், நுழைவு B தெற்கிலும் உள்ளது.

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், அமைவிடம் ...
Remove ads

காட்சியகம்

கோன்லே எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads