கோரிப்பாளையம் (மதுரை)
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோரிப்பாளையம் (Goripalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை மாவட்டம் தன்னகத்தே கொண்ட ஒரு புறநகர்ப் பகுதி.
Remove ads
அமைவிடம்
கோரிப்பாளையம் நகரின் அமைவிடம் 9°55'58.7"N78°07'44.0"E
அருகிலுள்ள நகர், ஊர்கள்
மதுரை, செல்லூர், தல்லாகுளம், சிம்மக்கல், செனாய் நகர், ஆரப்பாளையம், நரிமேடு, பி. பி. குளம், சின்ன சொக்கிகுளம், நெல்பேட்டை, கீழவாசல் ஆகியவை கோரிப்பாளையத்திற்கு அருகிலுள்ள நகர் மற்றும் ஊர்கள் ஆகும்.
கல்வி
பள்ளிக்கூடங்கள்
கோரிப்பாளையம் அருகிலுள்ள நரிமேடு ஊரிலுள்ள ஓ.சி.பி.எம். (O.C.P.M.) மேல்நிலைப்பள்ளி மற்றும் நோயஸ் (Noyes) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, இங்குள்ள மாணவிகள் பயின்று பயனடைய உதவிகரமாக இருக்கின்றன.
கல்லூரிகள்
கோரிப்பாளையம் தன்னகத்தே கொண்டுள்ள பழமை வாய்ந்த அமெரிக்கன் கல்லூரி, மதுரை, நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் சிறப்புரை ஆற்றிய பெருமையுடைத்து. மதுரை மருத்துவக் கல்லூரி கோரிப்பாளையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே உள்ளது. கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள மற்றொரு கல்லூரி மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி. இக்கல்லூரி 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்ற பெருமையுடன் தன்னாட்சி அமைப்பு கொண்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கொண்ட ஓர் உறுப்புக் கல்லூரியுமாகும்.
போக்குவரத்து
பேருந்து போக்குவரத்து
கோரிப்பாளையத்திற்கு அருகிலுள்ள நகரப் பேருந்து நிலையங்கள்: மதுரை - பெரியார் பேருந்து நிலையம் (சுமார் 5 கி.மீ.), மதுரை - அண்ணா பேருந்து நிலையம் (சுமார் 2 கி.மீ.), மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் (சுமார் 4 கி.மீ.), மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (சுமார் 4 கி.மீ.). கோரிப்பாளையம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு சென்று வர, மதுரை மாநகரப் பேருந்து சேவைகள் மிக உதவிகரமாக உள்ளன. அழகர்கோயில் சாலை, பனகல் சாலை, ஆல்பர்ட் விக்டர் மேம்பாலச் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை, செல்லூர் சாலை ஆகியவை சந்திக்கும் கோரிப்பாளையம் சந்திப்பில் தினமும் சுமார் பத்தாயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இந்த இடத்திற்கு அருகில் ரூ. 210 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.[1] இம்மேம்பாலம், தல்லாகுளம் கோயில் அருகே தொடங்கி ஏவி மேம்பாலத்தில் முடிகிறது.[2] இந்த மேம்பாலம் நெல்பேட்டை பகுதி வரை அமையும்.
தொடருந்து போக்குவரத்து
மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், கோரிப்பாளையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ளது.
வானூர்தி போக்குவரத்து
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் கோரிப்பாளையம் ஊரிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்திலுள்ளது.
Remove ads
முக்கிய சாலைகள்
அழகர்கோயில் சாலை, பனகல் சாலை, ஆல்பர்ட் விக்டர் மேம்பாலச் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை, செல்லூர் சாலை ஆகியவை முக்கியமான சாலைகள்.
மருத்துவ வசதி
கோரிப்பாளையம் ஊரில் அமைந்துள்ள பல்நோக்கு அரசு இராசாசி மருத்துவமனை மூலம் கோரிப்பாளையம் மட்டுமல்லாது, மதுரை நகர் மக்கள் மற்றும் அருகிலுள்ள அனைத்து ஊர் மக்களும் மிகவும் பயனடைகின்றனர்.
தொழில்கள்
கோரிப்பாளையம் அருகிலுள்ள செல்லூர் ஊரில், ஏராளமான கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் காரணமாக, கோரிப்பாளையம் சுற்றிலும் உள்ள மக்களும் பயன் பெறுகின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள்
இந்துக் கோயில்கள்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், கோரிப்பாளையம் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இக்கோவிலின் சிறப்புத் திருவிழாவான 'கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு' கோரிப்பாளையம் அருகில் வைகை ஆற்றில் நடைபெறும் போது, மக்கள் வெள்ளம் கோரிப்பாளையம் முழுவதும் அலைமோதும். மேலும், தல்லாகுளம் சக்திமாரியம்மன் கோயில் மற்றும் தல்லாகுளம் பெருமாள் கோயில், கோரிப்பாளையம் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலுள்ளன.
முஸ்லீம் தர்கா
புகழ் பெற்ற கோரிப்பாளையம் தர்கா, இங்குள்ள முஸ்லீம் மக்களால் வணங்கப்படுகிறது. மற்றும் சந்தனக்கூடு திருவிழாவும் நடத்தப்பட்டு, மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
Remove ads
அரசியல் முக்கியத்துவம்
அழகர்கோயில் சாலை, பனகல் சாலை, ஆல்பர்ட் விக்டர் மேம்பாலச் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை, செல்லூர் சாலை ஆகியவை சந்திக்கும் கோரிப்பாளையம் சந்திப்பில், 'அரசியல் மற்றும் ஆன்மீகம் எனது இரண்டு கண்கள்' என்று வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நினைவாக, அவரது நின்ற திருக்கோலத்தில் ஐம்பொன் சிலை ஒன்று அமைக்கப் பெற்று, அனைத்து அரசியல் கட்சியினராலும் வணங்கப்படுகிறது.
கோரிப்பாளையம் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads