கோழிக்கோடு தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோழிக்கோடு தொடருந்து நிலையம் (Kozhikode railway station) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் முதன்மையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். 2018–19 நிதியாண்டில் ₹200 கோடி (2023 இல் ₹249 கோடி அல்லது 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வருவாய் ஈட்டியது. இது, பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை மிகப்பெரியது. இந்த நிலையத்தில் நான்கு நடைமேடைகள், இரண்டு முனையங்கள், ஆறு தடங்கள் உள்ளன. முதல் நடைமேடையில் 24 பெட்டிகளும், இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் 20 பெட்டிகளும், நான்காவது நடைமேடையானது 24 பெட்டிகள் கொண்ட தொடருந்துகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது. தினசரி 25,000 பயணிகள் வருகை தரக்கூடியதாக இந்த நிலையம் உள்ளது. பலக்காடு இரயில்வே கோட்டத்தில் உள்ள ஒரே ஏ1-கிரேடு நிலையமாக இது விளங்குகிறது. இது கேரளத்தில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் இருந்து புனே, திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை, புது தில்லி, மும்பை, ஐதராபாத்து, கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா, மங்களுர், ஜம்மு தாவி, கோவா, எர்ணாகுளம் மற்றும் பல முக்கிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கின்றன. ஃபெரோக், ( குறியீடு: FK ), கல்லாய் கோழிக்கோடு தெற்கு (குறியீடு: KUL), வேல்லேயில் (குறியீடு: VLL), வெஸ்ட் ஹில் (குறியீடு: WH) ஆகியவை நகரத்தில் உள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஆகும்.
பயணப் பொதி நுணுகிநோக்கிகள், கண்காணிப்பு ஒளிப்படமிகள், வாகன நுணுகிநோக்கிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு 2012 இல் நிலையத்தில் நிறுவப்பட்டது. [2] நிலையத்தின் 125வது ஆண்டு விழா சனவரி 2013 அன்று கொண்டாடப்பட்டது. [3]
Remove ads
வரலாறு
கோழிக்கோடு செல்லும் இருப்புப் பாதை 1888 சனவரி, 2 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை ரயில்வேயின் மேற்கு முனையமாக இந்த நிலையம் இருந்தது. மலபாரில் முதல் பாதை சாலியம் மற்றும் திரூர் இடையே அமைக்கப்பட்டது, இது ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது. கோழிக்கோடில் புதிய வழித்தடம் அமைக்கபட்டதும், நிர்வாக மையமாக இதன் வளர்ச்சியுடன், சாலியம் நிலையத்தின் முக்கியத்துவம் குறைய காரணமாயிற்று. இதனால் அதன் இருப்புப் பாதை பின்னர் கைவிடப்பட்டது. [4]
1888 ஆம் ஆண்டு இரயில்வே ஊழியர்களின் சமூக வாழ்க்கைக்கான இடமாக விளங்கும் வகையில், தொடருந்து நிலையத்தை ஒட்டி ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே இன்ஸ்டிடியூட் என்ற பெயரிலான மனமகிழ் மன்றம் மற்றும் நீராவி என்ஜின்களில் தண்ணீரை பம்ப் செய்ய இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வார்ப்பிரும்பினாலான இயந்திர நீரேற்றி உட்பட பல பழங்கால சாதனங்கள் இந்த நிலையத்தில் உள்ளன. நிலையத்தின் 125வது ஆண்டு விழா சனவரி 2, 2013 அன்று கொண்டாடப்பட்டது. 2018 சனவரியில் "இந்தியாவின் தூய்மையான தொடருந்து நிலையம்" என்ற மதிப்பைப் பெற்றது.
Remove ads
உள்கட்டமைப்பு
இந்த நிலையத்தில் நான்கு நடைமேடைகள் மற்றும் இரண்டு முனையங்கள் உள்ளன. முதல் நடைமேடையில் 24 பெட்டிகளும், மூன்றாவது நடைமேடையில் 20 பெட்டிகள் கொண்ட தொடருந்துகளையும் நான்காவது நடைமேடையில் 24 பெட்டிகளை நிறுத்தும் திறன் கொண்டது. [5] தினசரி 25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் பாலக்காடு இரயில்வே கோட்டத்தில் ஏ-1 தரம் தரம் பெற்ற ஒரே நிலையமாக இது விளங்குகிறது. [6]
கோழிக்கோட்டில் இருந்து புறப்படும் வண்டிகள்
- In view of corridor block for facilitating maintenance and safety works in various divisions over Southern Railway train no.06496 stands cancelled
சேவைகள்
இந்த நிலையத்தில் இருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை, புது தில்லி, மங்களூர், மும்பை, ஹைதராபாத், அகமதாபாது, கொல்கத்தா, சூரத்து , புனே, செய்ப்பூர், விசாகப்பட்டினம், ஜம்மு தாவி, கோவா போன்ற இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் தொடருந்துகளைக் கொண்ட கேரளத்தின் முக்கிய தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். ஃபெரோக், ( குறியீடு: FK ), கல்லாய் கோழிக்கோடு தெற்கு (குறியீடு: KUL), வேல்லேயில் (குறியீடு: VLL), வெஸ்ட் ஹில் (குறியீடு: WH) ஆகியவை நகரத்தில் உள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஆகும்.. [7] [8]
Remove ads
வசதிகள்
பயணப் பொதி நுணுகிநோக்கிகள், சிசிடிவிகள், வாகன நுணுகிநோக்கிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு 2012 இல் நிலையத்தில் நிறுவப்பட்டது. [9]
- முன்பதிவு மையம் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்
- பயணிகள் ஓய்வு அறைகள் (பயணிகள் தங்கும் இட வசதி)
- கணிணி மையம்
- சிப்பம் முன்பதிவு அலுவலகம்
- ரயில்வே அஞ்சல் சேவை (RMS) அலுவலகம்
- ரயில்வே பாதுகாப்பு படை - வட்ட அலுவலகம்
- ஐ.ஆர்.டி.சி. உணவகங்கள்
- தானியங்கி பணப்பொறிகள்
- முன்பணம் செலுத்தி பயணிக்கும் தானி வாகன மையங்கள் [10]
- முன் பணம் செலுதி வாகன நிறுதுமிடங்கள் [11]
- நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி அமைப்புகள் [12]
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான மின்சாரக் கார் வசதி
Remove ads
தானியங்கி பணப்பொறிகள்
தொடருந்து நிலையத்தில் பின்வரும் வங்கி பணப்பொறிகள் உள்ளன:
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads