கோழிக்கோடு நாராயணன் நாயர்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோழிக்கோடு நாராயணன் நாயர் (Kozhikode Narayanan Nair) மலையாளத் திரைப்படங்களில் தோன்றும் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.[1] இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு நாடக குழு மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார். இவரது முதல் படம் ஆபிஜத்யம் 1970இல் வெளியானது. மேலும் இவர் வாத்சால்யம் (1993) என்ற மலையாளத் திரைப்படத்தில் கோவிந்தன் நாயர் என்ற பாத்திரத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.

விரைவான உண்மைகள் கோழிக்கோடு நாராயணன் நாயர், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

நாயர் 1940இல் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள பந்திரங்காவூரில் பிறந்தார். இவர் தனது பள்ளி வாழ்க்கையின் தொடக்கத்திலேயே நாடகங்களில் ஆர்வம் காட்டினார். பின்னர், இவர் ஸ்டேஜ் இந்தியா என்ற ஒரு தொழில்முறை நாடகப் பட்டறையில் உறுப்பினரானார்.

திரைப்பட வாழ்க்கை

தனது 50 வருட நடிப்பு வாழ்க்கையில், மலையாளத் திரைப்படத் துறையில் 300 படங்களை முடித்தார். இவரது முதல் படம் அபிஜாத்யம் (1970). பின்னர் இவர் உத்ரயாணம், நிர்மால்யம், கொச்சுதெம்மாடி, ஒளியம்புகள், பரதம், ஆவனாழி, சதயம், என்டே ஸ்ரீகுட்டிக்கு, பெருந்தச்சன், மிதுனம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்முட்டிக்கு அடுத்ததாக வாத்சல்யம் (1993) படத்தில் வல்யமாமா என்ற குறிப்பிடத்தக்க பாத்திரத்திற்குப் பிறகு இவர் பிரபல நடிகரானார். வாத்சல்யம் (1993) படத்துக்குப் பிறகு, இவர் மலையாளத் திரையுலகில் ஒரு முக்கியக் கலைஞரானார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சத்திய சாய்பாபாவின் தீவிர பக்தரான நாயர் அடிக்கடி புட்டபர்த்திக்குச் செல்வார் . இவர் கோழிக்கோடு சைஹரிதத்தில் வசிக்கிறார். இவரது மனைவி பெயர் சாரதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், சுஹாஸ் என்ற ஒரு மகனும், சுசித்ரா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads