சத்ய நாராயண சின்கா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்ய நாராயண் சின்கா (Satya Narayan Sinha) (9 ஜூலை 1900 - 26 ஜூலை 1983) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராக பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் சத்ய நாராயண சின்கா, 4வது [[மத்தியப் பிரதேச ஆளுநர்]] ...
Remove ads

தொழில்

இவர், 1952இல் சமஸ்தீபூர் கிழக்கு மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1957, 1962இல், சமஸ்தீபூரிலிருந்தும், 1967இல் பீகாரிலுள்ள தர்பங்கா மக்களவைத் தொகுதியிலிருந்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3][4]

சின்கா, 1964 முதல் 1967 வரை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும், 1967 முதல் 1971 வரை சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 1971 இல் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு 1977 வரை பணியாற்றினார்.[5] இவர் 1983 ஜூலை 26 அன்று தனது 83 வயதில் இறந்தார்.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads