சத்யபால் மாலிக்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சத்யபால் மாலிக்
Remove ads

சத்ய பால் மாலிக்(பிறப்பு: ஜூலை 24, 1946-5 ஆகஸ்ட் 2025) பீகார், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், கோவா மற்றும் மேகாலயா ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். ஒரு அரசியல்வாதியாக 1974–77 காலகட்டத்தில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். 1980 முதல் 1986 மற்றும் 1986–89 வரை மாநிலங்களவையில் உத்தரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1989 முதல் 1991 வரை ஜனதா தளத்தின் உறுப்பினராக அலிகர் மக்களவைத் தொகுதியின் ஒன்பதாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். அக்டோபர் 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரை பீகார் ஆளுநராக இருந்தார்.[5][6]

விரைவான உண்மைகள் சத்யபால் மாலிக், மேகாலயா ஆளுநர் ...

மார்ச் 21, 2018 அன்று, இவருக்கு ஒடிசாவின் ஆளுநராக 28 மே 2018 வரை பணியாற்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2018 இல், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் அதன் 10வது மற்றும் கடைசி ஆளுநராக ஆனார். இவர் அக்டோபர் 2019 வரை அங்கு பணியாற்றினார். இவரது பதவிக் காலத்தில், ஆகஸ்ட் 2019 இல், மாநிலத்தின் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டது. பின்னர், கோவாவின் 18வது ஆளுநரானார். அதன் பின்னர் அக்டோபர் 2022 வரை மேகாலயாவின் 21வது ஆளுநராகவும் பணியாற்றினார்.[7][8]

Remove ads

இளமை வாழ்க்கை

சத்ய பால் மாலிக் ஜூலை 24, 1946 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தின் மீரட் மாவட்டத்தில் (தற்போது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பாகுபத் மாவட்டத்தில் உள்ளது) இசாவாடா என்ற கிராமத்தில் ஒரு இந்து ஜாட் குடும்பத்தில் பிறந்தார்.[9][10][11]

மாலிக் சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை மற்றும் சட்ட இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார்.[12] 1968–69 ஆம் ஆண்டில், மாலிக் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[13]

நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட மாலிக் ஆகஸ்ட் 5, 2025 அன்று தனது 79 வயதில் இறந்தார்.[14]

Remove ads

அரசியல்

சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் உறுப்பினரான மாலிக் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, பாகுபத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முதலில் பொதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பதிவான வாக்குகளில் 42.4% பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஆச்சார்யா தீபங்கரை தோற்கடித்து தேர்தலில் வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 31.6% வாக்குகளைப் பெற்றார்.[15]பின்னர், பாரதிய லோக் தளம் உருவான பிறகு, அக்கட்சியில் சேர்ந்து லோக் தளத்தின் பொதுச் செயலாளரானார்.[16]

Remove ads

தேசிய அரசியல்

மாநிலங்களின் ஆளுநர்

அரசியல் பார்வை

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு

நவம்பர் 8, 2021 அன்று, மாலிக் உலகளாவிய ஜாட்டுகளின் உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். மேலும் தனது உரையில்,2020–2021 இந்திய விவசாயிகளின் போராட்டத்தை கையாள்வது குறித்து இந்திய அரசாங்கத்தை குறை கூறினார்.[19][19][20]

புல்வாமா தாக்குதல் மற்றும் நரேந்திர மோடி பற்றிய பார்வைகள்

ஏப்ரல் 14, 2023 அன்று, கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், புல்வாமா தாக்குதல் 2019 மற்றும் நரேந்திர மோதி குறித்து மாலிக் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.[21]

  1. நரேந்திர மோடிக்கு ஊழல் மீது எந்த அக்கறையும் இல்லை. மேலும் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  2. முன்னாள் ஜம்மு-காஷ்மீடின் ஆளுநர், 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு வழிவகுத்த தவறுகள் குறித்து கடுமையான கூற்றுக்களையும் முன்வைத்தார். அதில் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அந்த நேரத்தில் தவறுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் தாக்குதலின் அனைத்துப் பொறுப்பும் பாகிஸ்தான் மீது சுமத்தப்படும் என்பதையும் தான் உணர்ந்ததாகவும் கூறினார்.[22]
  3. இவ்வளவு பெரிய கான்வாய் பொதுவாக சாலை வழியாக பயணிக்க முடியாத காரணத்தால், மத்திய சேமக் காவல் படைவீரர்களை ஏற்றிச் செல்ல விமானம் கேட்டிருந்தனர் என்றும் மாலிக் கூறினார். இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றும் ஆனால் அவர்கள் விமானம் கொடுக்க மறுத்துவிட்டனர் என்றும் கூறினார்.
  4. புல்வாமா சம்பவத்தில் உளவுத்துறை கடுமையாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் மாலிக் கூறினார். ஏனெனில் 300 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது. ஆனால் சம்மு காசுமீரின் சாலைகள் மற்றும் கிராமங்களில் 10-15 நாட்கள் யாரும் கண்டுபிடிக்கப்படாமலும், யாருக்கும் தெரியாமலும் பயணித்துள்ளது.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads