சபாக் பெர்ணம் மாவட்டம்

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சபாக் பெர்ணம் மாவட்டம்
Remove ads

சபாக் பெர்ணம் மாவட்டம் (மலாய்: Daerah Sabak Bernam; ஆங்கிலம்: Sabak Bernam District; சீனம்: 沙白安南县) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

விரைவான உண்மைகள் சபாக் பெர்ணம் மாவட்டம், தொகுதி ...

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை உள்ளன.

சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: சபாக்; சுங்கை பெசார்; செகிஞ்சான். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் சபாக் பெர்ணம் நகரம் ஆகும்.

Remove ads

பொது

சபாக் பெர்ணம் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் நெல் விளையும் கேந்திரப் பகுதி. அந்த வகையில் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை விவசாயம். இந்த மாவட்டம் சிலாங்கூரின் அதி மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

நிர்வாகப் பகுதிகள்

சபாக் பெர்ணம் மாவட்டம், சபாக் பெர்ணம் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

  1. பாகன் நக்கோத்தா ஒமார் (Bagan Nakhoda Omar)
  2. பாஞ்சாங் பெண்டேனா (Panchang Bendena)
  3. பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang)
  4. சபாக் (Sabak)
  5. சுங்கை பாஞ்சாங் (Sungai Panjang)

மலேசிய நாடாளுமன்றம்

Thumb
சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[2]

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[3]

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...
Remove ads

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 157 மாணவர்கள் பயில்கிறார்கள். 22 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[4][5]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads