சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) ( எஸ்ஜேபி(ஆர்) ), ஜனதா தளம் (சோசலிஸ்ட்) என்றும் அழைக்கப்படும் ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது 1990-91ஆம் ஆண்டில் இந்தியாவின் 8வது பிரதமரான சந்திர சேகர் என்பவரால் நிறுவப்பட்டது. மேலும் இவர் சூலை 8, 2007ஆம் தேதி இறக்கும் வரை வழிநடத்தினார். சந்திரசேகர் இறக்கும் போது கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்தார். ஜனதாதளத்திலிருந்து சந்திரசேகர் மற்றும் தேவிலால் பிரிந்தபோது 1990 நவம்பர் 5 அன்று கட்சி உருவாக்கப்பட்டது.[2]
Remove ads
ஆட்சி அமைத்த வரலாறு
- இக்கட்சிக்கு 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சி அமைப்பதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி சார்பில் 195 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அத்வானி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி சார்பில் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க சந்திரசேகர் பிரதமரானார்.
- மேலும் இன்று வரை இந்தியாவில் எதிர்கட்சியாக திகழும் காங்கிரஸ் மற்றும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருந்து சந்திரசேகர் பிரதமராவதற்கு அவரது சமாஜ்வாடி ஜனதா கட்சிக்கு ஆதரவளித்தனர்.
- 1994 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 1993-ல் ஜனதா தளத்துடன் மாநில அலகு இணைக்கப்படும் வரை சோ. ரா. பொம்மை கர்நாடக மாநிலத் தலைவராக இருந்தார்.[3]
- 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சரான கமல் மொரார்கா கட்சியின் தலைவராக இருந்தார். கட்சியின் தலைமையகம் புது டெல்லியில் நரேந்திர நிகேதனில் அமைந்துள்ளது.[4]
- 14 ஏப்ரல் 2015 அன்று, சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய), ஐக்கிய ஜனதா தளம், ஜனதா தளம் (மதச்சார்பற்ற), இராச்டிரிரிய ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றுடன் புதிய தேசிய கூட்டணியான ஜனதாவில் இணைவதாக அறிவித்தன. பாரதிய ஜனதாவை எதிர்க்கும் வகையில் இக்கூட்டணி செயல்பட்டது.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads