சம்பராயனேந்தல்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்பராயனேந்தல் கிராமம் (Samparayanendal Gram), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் திருப்பாச்சேத்தி மற்றும் வாகுடிக்கு இடையில் அமைந்துள்ளது.[4] சம்பராயனேந்தல் கிராமத்தில் மொத்தம் 7 கோவில்கள் மற்றும் ஒரு குளம் உள்ளது.கல்வி பயில அங்கன் வாடி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.பொதுமக்களுக்கு அரசு சார்பில் நியாயவிலைக்கடை உள்ளது.ஒரு நீர்நிலை தொட்டி, நான்கு நீர்நிலை குழாய்கள் மற்றும் ஒரு குளியல் தொட்டி உள்ளன. இவ்வூரில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நடைபெறும்.
Remove ads
அமைவிடம்
கொச்சி-மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை எண்-49 இல் திருப்புவனத்திலிருந்து சுமார்-15 கி.மீ தூரத்திலும் திருப்பாச்சேத்தியிலிருந்து சுமார் 2.8கி.மீ தூரத்திலும் வைகை ஆற்றின் தென் கரையிலும் அமைந்துள்ள கிராமமுமாகும்.இது கிழக்கு மேற்காக திருப்பாச்சேத்தி மற்றும் வாகுடிக்கு இடையில் அமைந்தும் வடக்கு தெற்காக மழவராயனேந்தல் மற்றும் வெள்ளிக்குறிச்சிக்கு இடையில் அமைந்த ஊராகும்.
நிர்வாக அலகு
- மாவட்டம்: சிவகங்கை
- வருவாய் கோட்டம்: சிவகங்கை
- வட்டம்: மானாமதுரை
- வருவாய் கிராமம்: சம்பராயனேந்தல்
- ஊராட்சி ஒன்றியம்: திருப்புவனம்
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): மழவராயனேந்தல்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads