சிந்து பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்து பள்ளத்தாக்கு அல்லது சிந்து சமவெளி (Sind Valley) வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில, காந்தர்பல் மாவட்டத்தில், இமயமலை மலைதொடரில் அமைந்துள்ளது.
சிந்து பள்ளத்தாக்கின் நுழைவாயில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து வடகிழக்கே முப்பத்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிந்து பள்ளத்தாக்கு அறுபத்து ஐந்து கிலோ மீட்டர் நீளமும், அதிக பட்சமாக ஒன்பது கிலோ மீட்டர் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு ஆகும். [2]
Remove ads
வரலாறு
சிந்து பள்ளத்தாக்கு பண்டைய பட்டுப் பாதையில் அமைந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பள்ளத்தாக்கு இந்தியா, சீனா, நடு ஆசியா ஆகிய பகுதிகளை ஸ்ரீநகர் - ஸ்கர்டு வழியாக இணைக்கிறது. [3] சிந்து பள்ளத்தாகு வழியாக காஷ்மீரத்தில் முதலில் இந்து சமயம் [4] பின்னர் பௌத்த சமயம், இசுலாமிய சமயம் பரவியது. பாரசீக இசுலாமிய சாது மீர் சையத் அலி ஹமதானி 1372-ஆம் ஆண்டில் தனது 700 ஆதரவாளர்களுடன் சிந்து பள்ளத்தாக்கின் வழியாக காஷ்மீரத்திற்கு வந்தார். [5] இவர் இப்பள்ளத்தாக்கில் பலவிதமான பாரசீகக் கலை நுட்பங்களை காஷ்மீர மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.[6]தேசிய நெடுஞ்சாலை 1டி சிந்து பள்ளத்தாக்கு வழியாக லடாகையும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. குளிர்காலத்தில் கடுமையான பனிப் பொழிவின் போது இந்த தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு விடுகிறது.[7]
Remove ads
நிலவியல்



சிந்து பள்ளத்தாக்கு, காந்தர்பல் மாவட்டத்தில் கங்கன் வருவாய் வட்ட நிர்வாகப் பகுதியில் உள்ள இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது. சிந்து பள்ளத்தாக்கின் மேற்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, கிழக்கில் ஜோஜிலா, வடக்கில் நீலம் ஆறும், தெற்கில் லித்தர் பள்ளத்தாக்கும் எல்லைகளாக கொண்டுள்ளது. [8]
சிந்து பள்ளத்தாக்கு அறுபத்து ஐந்து கிலோ மீட்டர் நீளமும், அதிக பட்சமாக ஒன்பது கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. சில இடங்களில் இதன் அகலம் ஐநூறு மீட்டர்களுக்கும் குறைவாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1டி சிந்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் ஒரே சாலையாகும். இச்சாலை லாடாக்கை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. திராஸ் பகுதியில் உள்ள மசோய் பனியாற்றிலிருந்து உற்பத்தி ஆகும் நல்லா சிந்து ஆறு சிந்து பள்ளத்தாக்கில் கிழக்கிலிருந்து மேற்காக பால்டால் மற்றும் சோனாமார்க் வழியாக பாய்கிறது.[9][10] நல்லா சிந்து ஆறு புனல் மின் நிலையங்கள் மின்சாரம் தயாரிக்கவும், வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ளது. இந்த ஆறு பாயுமிடங்களில் தேவதாரு மரங்களும், ஊசி இலைக் காடுகளும் அதிகமுள்ளது.[11]
சிந்து பள்ளத்தாக்கில் அமைந்த முக்கிய நகரங்கள் குந்து, பகல்கம் மம்மர், கங்கன், வாங்காத், பிரங், மணிகாம் மற்றும் ஊசன் ஆகும்.
சிந்து பள்ளத்தாக்கில் அமைந்த பல பனியாறுகளும், சிந்து ஆற்றின் துணை ஆறுகளும் இப்பகுதியை வளமாக்கிறது. [12]
இப்பள்ளத்தாக்கில் இமயமலை கருங்கரடிகளும், பழுப்பு கரடிகளும், கலைமான்களும், பனிச் சிறுத்தைகளும் காஷ்மீர் கலைமான்களும் காணப்படுகிறது.[13]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads