சிரம்பான் மாநகராட்சி
சிரம்பான் மாவட்டத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிரம்பான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seremban; ஆங்கிலம்: Seremban City Council); (சுருக்கம்: MBS) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில்; சிரம்பான் மாநகரத்தையும்; சிரம்பான் மாவட்டத்தையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.
இந்த மாநகராட்சி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
வளர்ச்சிப் படிகள்
- சிரம்பான் பொதுத் தூய்மைக் கழகம் (மலாய்: Lembaga Kesihatan Seremban; ஆங்கிலம்: Seremban Sanitary Board); 1897;
- சிரம்பான் நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Seremban; ஆங்கிலம்: Seremban Town Board); 1946;
- சிரம்பான் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Seremban; ஆங்கிலம்: Seremban Town Council); 1953;
- சிரம்பான் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Seremban; ஆங்கிலம்: Seremban Municipal Council); 1 மார்ச் 1979;
- சிரம்பான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seremban; ஆங்கிலம்: Seremban City Council); 1 சனவரி 2020 தொடக்கம்;[3][4]
Remove ads
பொது
சிரம்பான் மாநகராட்சி முதல்வரும்; சிரம்பான் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; சிரம்பான் மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[5].
Remove ads
அமைவு
சிரம்பான் மாநகராட்சி, சிரம்பான் மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியது. அதன் எல்லைகளாக உள்ள இடங்கள்:
- செலுபு மாவட்டம் (Jelebu)
- கோலா பிலா மாவட்டம் (Kuala Pilah District);
- ரெம்பாவ் மாவட்டம் (Rembau District);
- போர்டிக்சன் மாவட்டம் (Port Dickson District);
- காஜாங் (Kajang) (சிலாங்கூர்);
- சிப்பாங் மாவட்டம் (Sepang District) (சிலாங்கூர்);
சிரம்பான் மாநகராட்சி தமிழ்ப்பள்ளிகள்
சிரம்பான் மாநகராட்சிக்குள் சிரம்பான் மாவட்டம் அமைந்து உள்ளது. அந்த வகையில் 19 தமிழ்ப்பள்ளிகள் சிரம்பான் மாநகராட்சியின் கவனிப்பில் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads