சிஷ்யா
செல்வா இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிஷ்யா என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். செல்வா இயக்கிய இந்த படத்தில் கார்த்திக், ரோஷினி, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரங்கை வி. சுந்தர் தயாரித்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்தார். படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[1]
Remove ads
கதை
அமைச்சரின் மகள் ஸ்ருதி ( ரோஷினி ) தில்லியில் இருந்து தன் குடும்பத்தாருக்குத் தெரியாமல் சென்னைக்கு வந்துவிடுகிறாள். அவள் அரவிந்தனை ( கார்த்திக் ) காதலிக்கிறாள். ஆனால் சிபிஐ அதிகாரியான ( நிழல்கள் ரவி ) அவளைக் கண்டுபிடித்து தில்லிக்கு திருப்பி அனுப்புகிறார். இதன் மூலமாக அந்த இருவரும் பிரிக்கப்படுகின்றனர். இதன் பின்னர் என்ன ஆனது என்பதே கதையின் முடிவு.
நடிப்பு
- கார்த்திக் -அரவிந்தாக
- ரோஷினி சுருதி / அனு
- கவுண்டமணி அரவிந்தின் நண்பன்
- மணிவண்ணன் காவல் ஆய்வாளர் மலைச்சாமி
- விசு ஆதிமூலம்
- தியாகு
- விவேக்
- நிழல்கள் ரவி சிபிஐ அதிகாரி அசோக் நாராயணன்
- கிரேசி மோகன் மேலாளர்
- சிட்டி பாபு அமைச்சர்
- கௌதம் சுந்தர்ராஜன் கௌதம்
- மோகன் ராமன்
- விச்சு விசுவநாத்
- எல். ஐ. சி. நரசிம்மன்
- விசித்ரா சிறப்புத் தோற்றம்
இசை
வரவேற்பு
நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கே. என். விஜயன் எழுதிய விமர்சனத்தில், "சிஸ்யாவில் நகைச்சுவை ஒரு வலுவான பகுதியாக உள்ளது. அது மட்டுமே திரைப்படத்தை தூக்கி நிறுத்துகிறது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads